மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ இந்தியா அறிக்கை- டிஜிட்டல் கல்வி ஜூன் 2020 ஐ அறிமுகப்படுத்தினார்

Posted On: 28 JUL 2020 6:34PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று 2020ஆம் ஆண்டு டிஜிட்டல் கல்வி குறித்த இந்திய அறிக்கையை காணொளிக் காட்சி வாயிலாக வெளியிட்டார். வீட்டிலேயே குழந்தைகள் எளிதில் அணுகக்கூடிய வகையில், அனைத்தையும் உள்ளடக்கிய கல்வியை உறுதி செய்வதற்கும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதற்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மாநிலங்களின் கல்வித் துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றிய புதுமையான வழிமுறைகள் குறித்து இந்த அறிக்கை விரிவாகக் கூறுகிறது என்று திரு. போக்ரியால் தெரிவித்தார். பள்ளிகளை மாணவர்களிடம் கொண்டு செல்வதன் மூலம் அனைவருக்கும் தொலைநிலை கல்வி கற்றலை எளிதாக்குவதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள இந்த அறிக்கையைப் படிக்குமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொலைநிலைக் கற்றலை வழங்குவதில் உள்ள சவால்களைப் புரிந்துகொள்ள, இணைய வசதி இல்லாத, குறைந்த அளவில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளை அணுக கூடிய குழந்தைகளை மையமாகக் கொண்டு NIOS, சுயம் பிரபா உள்ளடக்கங்கள் பரப்பப்படுகின்றன. புதுமையான ஊடகங்கள் மூலம் மாநிலங்களில் எடுக்கப்படும் முயற்சிகள் உள்ளடக்கம் சேர்ப்பதை உறுதி செய்கிறது. உதாரணமாக - மாணவர்களுக்கு முக்கியமான தலைப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கும் ஆந்திரா கட்டணமில்லா அழைப்பு மையம் மற்றும் கட்டணமில்லா காணொளி அழைப்பு மையம் ஆகியவற்றைத் தொடங்கியுள்ளது. மோசமான மொபைல் இணைப்பு மற்றும் இணைய சேவைகள் கிடைக்காததால், சத்தீஸ்கர் மோட்டார் இஸ்கூலைத் (Motor Iskool) தொடங்கியுள்ளது. கட்டணமில்லா எண்ணை VFS (மெய்நிகர் புல ஆதரவு) என அரசு தொடங்கியுள்ளது. ஜார்கண்ட் ரோவிங் ஆசிரியரைத் (Roving teacher) தொடங்கியுள்ளது, அங்கு பல ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க அவர்களை நோக்கி செல்கின்றனர். குஜராத் வாய்வழி வாசிப்பு சரளத்திற்காக வாசித்தல் பிரச்சாரமான, வாசித்தல் & குடும்பத்துடன்அன்பாக, பாதுகாப்பாக (Vanchan Abhiyan and Parivar no maalo-salamat ane humfaalo) என்ற குழந்தைகளுக்கான சமூக உளவியல் ஆதரவுத் திட்டத்தை தொடங்கியது. மேற்கு வங்கம் ஒரு பிரத்யேக அர்ப்பணிப்புடன் கட்டணமில்லா உதவி எண் மூலம் மாணவர்களை அழைத்து சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறது.

இணைய இணைப்பு மற்றும் மின்சாரம் குறைவாகவும், இடையூறாகவும் இருக்கும் தொலைதூரப் பகுதிகளில் கற்றலை உறுதி செய்வதற்காக, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று பாடப்புத்தகங்களை விநியோகித்துள்ளன. ஒடிசா, மத்தியப்பிரதேசம் (தக்ஷதா உன்னயன் திட்டத்தின் கீழ்), தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டியு போன்ற சில பகுதிகளில் மாணவர்களைச் சென்றடைய இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. க்‌ஷத்தீப்பில் உள்ள மாணவர்களுக்கு மின் உள்ளடக்கங்களைக் கொண்ட பலகைக் கணினிகளை விநியோகித்துள்ளனர். நாகாலாந்து டிவிடி / பென் டிரைவ் மூலம் ஆய்வுப் பொருள்களை மாணவர்களுக்கு மலிவு விலையில் விநியோகித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கு இலவச tabs விநியோகித்துள்ளது, மேலும் மடிக்கணினிகள் மற்றும் பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு தொட்டுணரக்கூடிய பிரெய்ல் புத்தகங்களையும் விநியோகித்துள்ளது.

அறிக்கையை வாசிக்க இங்கே அணுகலாம்:

https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/India_Report_Digital_Education_0.pdf

 

*****



(Release ID: 1641885) Visitor Counter : 5306