அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் -19 பாதித்தவர்களின் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கண்டுபிடிப்புக்கென கைபேசி செயலி ஒன்றை பெங்களூருவில் உள்ள தொடக்கநிலை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது

Posted On: 28 JUL 2020 1:10PM by PIB Chennai

கோவிட் அபாயத்தை மதிப்பீடு செய்யும் லைஃபாஸ் கோவிட் எனும் குறியீடு அமைப்பை உருவாக்க பெங்களூவில் உள்ள தொடக்கநிலை நிறுவனமான அக்குளி லேப்ஸ்-ஐ, அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் கோவிட்-19 மருத்துவ ஆபத்துக்கு எதிரான போரினை வலுப்படுத்தும் மையம் -CAWACH,
தெரிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் தேசிய அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் CAWACH, கோவிட்-19 கட்டுப்பாடு மற்றும் அது சார்ந்த சவால்களைச் சந்திக்க,
சந்தைப் படுத்தத் தயாராக உள்ள புதுமைபடைப்புகளையும் தொடக்கநிலை நிறுவனங்களையும் ஊக்குவித்து வருகிறது.

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம், அறிகுறிகள் இல்லாத நபர்களிடம் ஏற்பட்டுள்ள சாத்தியமான தொற்றினைக் கண்டுபிடித்து வழக்கமான சோதனைகளின் வரிசை
முன்னுரிமையைக் கணிக்க உதவுவதுடன், இத்தகைய அறிகுறிகள் இல்லாத நபர்கள் அறிகுறிகளுடன் கூடிய நபர்களாக மாறும் அபாய மதிப்பீடு, அறிகுறிகள் இல்லாத நபர்கள் உடல்நிலை தேறுவது
குறித்த மதிப்பீடு ஆகியனவற்றையும் செய்ய உதவும்.

*****



(Release ID: 1641800) Visitor Counter : 224