பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா - இந்தோனேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்பந்தம்.
Posted On:
27 JUL 2020 5:09PM by PIB Chennai
இந்தியா இந்தோனேசியா இடையிலான பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்திய தூதுக்குழுவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். அதேபோல், இந்தோனேசிய தூதுக்குழுவிற்கு அதன் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தலைமை தாங்கினார். இந்தியா இந்தோனேசியா ஆகிய கடல்சார் அண்டை நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்த இந்தோனேசிய தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்புத்துறை அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் தொடர்புகளின் நீண்ட வரலாற்றை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளும் நெருக்கமான அரசியல் உரையாடல், பொருளாதார மற்றும் வர்த்தக இணைப்புகள் மற்றும் கலாச்சார மற்றும் மக்கள் தொடர்புகளின் பாரம்பரியம் கொண்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இரு நாட்டு இராணுவத் தொடர்புகள் திருப்தி அளிப்பதாக கூறிய திரு.ராஜ்நாத் சிங், இந்தியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமீபத்திய ஆண்டுகளில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். இரு அமைச்சர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட துறைகளில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த ஒப்புக்கொண்டனர்.
பாதுகாப்புத் தொழில்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான சாத்தியகூறுகள் எவை எவை என்று இரு நாடுகளும் விவாதித்து அடையாளம் கண்டனர். இரு அமைச்சர்களும் அடையாளம் காணப்பட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், அவற்றை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவும் உறுதிபூண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் முழு மூச்சில் செயல்படுவோம் என்ற முடிவோடு இந்த சந்திப்பில் நிறைவடைந்தது.
பாதுகாப்புப் படைத் தலைவர் மற்றும் இராணுவ விவகாரத் துறைச் செயலாளர் ஜெனரல் பிபின் ராவத், ராணுவப்படைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே, கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பாதாவுரியா மற்றும் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர், அஜய் குமார் மற்றும் பிற மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இந்த இருதரப்புக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஜெனரல் சுபியான்டோ இந்த சந்திப்புக்காக வருகை தந்த போது சவுத் பிளாக் புல்வெளிகளில் பாரம்பரிய மரியாதை அணிவகுப்புடன் வரவேற்பு நடத்தப்பட்டது. அவரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தானே நேரில் வந்து அவரை வரவேற்றார்.முன்னதாக, ஜெனரல் சுபியான்டோ தேசிய போர் நினைவுச்சின்னத்தைப் பார்வையிட்டு மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாலை அணிவித்தார்.
(Release ID: 1641625)
Visitor Counter : 291