நிதி அமைச்சகம்

பொது இயக்குநரகம் ஜிஎஸ்டி புலனாய்வு (DGGI) 600 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்த மூன்று நிறுவனங்களைக் கண்டறிந்து வழக்கு பதிந்தது.

Posted On: 27 JUL 2020 4:43PM by PIB Chennai

M / s பார்ச்சூன் கிராபிக்ஸ் லிமிடெட், M/s ரீமா பாலிச்செம் பிரைவேட் லிமிடெட் & M/s. கணபதி எண்டர்பிரைசஸ், ஆகிய மூன்று நிறுவனங்களும் எந்தவொரு பொருள்களும் இல்லாமல் விலைப்பட்டியல் தயாரித்து வழங்குவதில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  செப்டம்பர் 2019இல் பொது இயக்குநரகம் ஜிஎஸ்டி புலனாய்வு - வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DGGI DRI) செப்டம்பர் 2019 தொடங்கிய அகில இந்திய கூட்டு நடவடிக்கையில், பல்வேறு ஏற்றுமதியாளர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஏற்றுமதியாளர்களில் ஒருவரான M / s அனன்யா எக்ஸில் (Anannya Exim)க்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மேலும் தரவுப் பகுப்பாய்வு குறித்த விவரங்களை அதிகாரிகள் கண்டறிந்த பகுத்தாராய்ந்த போது, தகுதியற்ற உள்ளீட்டு வரிக்கடனை (ITC) காரணமாக காட்டி, ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரி (IGST) பணத்தைத் திரும்பப் பெறுவது தெரிய வந்தது. ஜிஎஸ்டி புலனாய்வு தலைமையக இயக்குநரகம் (DGGI – Headquarters)  நடத்திய விசாரணையின் போது, ​​ M / s என்று தெரியவந்துள்ளது. M /s ரீமா பாலிச்செம் பிரைவேட் லிமிடெட் லிமிடெட், M / s. பார்ச்சூன் கிராபிக்ஸ் லிமிடெட் மற்றும் மெ. கணபதி எண்டர்பிரைசஸ் ஆகிய மேற்கூறிய மூன்று நிறுவனங்கள் எந்தவொரு பொருள்களும் இல்லாமல், 4100 கோடி ரூபாய்க்கு மேல் விலைப்பட்டியல் தயாரித்து 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரித் தொகையை பல்வேறு நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரிக்கடனாக (ITC) மோசடியாக அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

 

CGST சட்டம், 2017 இன் 132 (1) (பி) மற்றும் 132 (1) (சி) பிரிவுகளின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக இந்த மூன்று நபர்களையும் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் (தலைமையகம்) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மாஜிஸ்திரேட் காவலில் விசாரிக்கப்படுகின்றனர்.

 

இந்த விவகாரத்தில் மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.


(Release ID: 1641586) Visitor Counter : 288