சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

உலகப் புலிகள் நாளையொட்டி புலிகள் கணக்கெடுப்பு பற்றிய விரிவான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெளியிடவுள்ளார்

Posted On: 27 JUL 2020 5:28PM by PIB Chennai

2020ஆம் ஆண்டுக்கான உலகப் புலிகள் நாளையொட்டி, அனைத்திந்திய புலிகள் மதிப்பீடு 2018 விரிவான நான்காவது அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் வெளியிட உள்ளார்.

 

இதையொட்டிய நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் 28 ஜூலை 2020 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும். இந்தநிகழ்ச்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் https://youtu.be/526Dn0T9P3E நேரடியாக ஒளிபரப்பப்படும்.. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 500 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில், புலிகள் நடமாடும் இடங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நாடுகளின் தலைவர்கள், புலிகள் பாதுகாப்பு தொடர்பான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் கையெழுத்திட்டு 2022ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று உறுதிபூண்டுள்ளனர்.க்கூட்டத்தின்போது ஜூலை 29 தினத்தை உலகம் முழுவதும் உலகப் புலிகள் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை உருவாக்கவும், அதன் அவசியம் குறித்து பரவச் செய்வதற்காகவும் உலக புலி நாள் கொண்டாடப்படுகிறது.

 

சென்ற ஆண்டு இதே நாளில் பிரதமர் திரு.நரேந்திரமோடி இந்தியாவில், புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆண்டான 2022ஆம் ஆண்டுக்கு, நான்கு ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும் என்று அறிவித்திருந்தார். 2010 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் பாதுகாப்பு சம்பந்தமான பிரகடனத்தில் 2022ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது உலகத்தில் உள்ள மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிகித புலிகள் இந்தியாவில் உள்ளன.

 

இந்தியாவில் உள்ள சிறிய காட்டுப் பூனைகள் பற்றிய சுவரொட்டி ஒன்றையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் வெளியிடுவார். இந்நிகழ்ச்சியை இந்த இணைப்பில் https://youtu.be/526Dn0T9P3E காணலாம்.

 

***


(Release ID: 1641581) Visitor Counter : 278