அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவுடன் நடைபெறும் மறுசீரமைப்பு பிசிஜி தடுப்பூசி விபிஎம்1002 சோதனைக்கு சுமார் 6000 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக தொற்று பாதிப்பு அபாயம் உள்ளவர்கள் பதிவு நிறைவடைந்தது.

Posted On: 27 JUL 2020 4:55PM by PIB Chennai

உயிரி தொழில்நுட்பத்துறையின் தேசிய பயோபார்மா திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா சார்பில் , விபிஎம் 1002 மறுசீரமைப்பு பிசிஜி தடுப்பூசியின் பிளேஸ்போ -கட்டுப்பாட்டு மருத்துவரீதியிலான பரிசோதனையின் மூன்றாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டதுமுதிர்ந்த வயதுடையவர்கள் அல்லது பல்வேறு நோய்களால் தாக்குண்டவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய கோவிட்-19 தொற்றால்  அதிகம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பைக் குறைக்கும் திறன் விபிஎம்1002 தடுப்பூசிக்கு உள்ளதா என்பதை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பிசிஜி தடுப்பூசி வழக்கமாக புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு, நுரையீரலைத் தாக்கும் பாக்டீரியாவால் ஏற்படும் காசநோயைத் தடுக்கும் தேசிய  குழந்தைப்பருவ நோய் எதிர்ப்புத் திறனூட்டல் திட்டத்தின்  ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. பரம்பரை விளைவுகளுக்கு பயனுள்ளதாகவும், தொற்று தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகவும் இது உள்ளது என நிரூபணமாகியுள்ளது. இது தொற்று நோய்களுக்கு எதிராகவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இந்த பிசிஜி தடுப்பூசிக்கு தொற்றை எதிர்த்து முறியடிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் திறன்  உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருத்துவ சோதனைக்கு, சுகாதாரப் பணியாளர்கள், கோவிட் நோயாளாகளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 6000 பேர் பதிவு செய்துள்ளனர்.

உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் BIRAC   தலைவரும், உயிரிதொழில்நுட்பத்துறை செயலருமான டாக்டர் ரேணு ஸ்வரூப் இதுபற்றிk கூறியபோது, “பிசிஜி தடுப்பூசி என்பது நிரூபிக்கப்பட்ட தளமாகும். காசநோயைத் தவிர மற்ற நோய்களுக்கு இது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதற்கான நடைமுறை அணுகுமுறை பயன்பாடு இதுவாகும். 2020 மே மாதம் சோதனை தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 40 மருத்துவமனைகளில்  6000 பேருக்கு பதிவு முடிந்துள்ளது. நோயைத் தடுக்கும் முயற்சியில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்இந்த முக்கியமான சோதனையின் முடிவுகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்’’ என்று கூறினார்.

(மேலும் தகவல்களுக்கு DBT/BIRAC பிரிவை

 @DBTIndia @BIRAC_2012• www.dbtindia.gov.in www.birac.nic.in

என்பதில் தொடர்பு கொள்ளவும்)

 

 

*****



(Release ID: 1641576) Visitor Counter : 296