மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

“எனது அரசு” (மைகவ்) இயக்கம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்: திரு.ரவிசங்கர் பிரசாத்

Posted On: 26 JUL 2020 8:07PM by PIB Chennai

“எனது அரசு (மைகவ்) இயக்கம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று மத்திய சட்டம் நீதி, தொலை தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் கூறினார். மைகவ் இயக்கம் துவக்கப்பட்டு, ஆறு  ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நடத்தப்பட்ட விழாவில் அவர் உரையாற்றினார்.

எனது அரசு இயக்கத்தின் பணிகளைப் பாராட்டிய திரு.பிரசாத், இந்த முன்முயற்சிகளை, குடிமக்களின் பங்களிப்பு வாயிலாக, மைகவ் மூலம் ஒவ்வொரு நகராட்சியையும், மாவட்டத்தையும், உள்ளாட்சி அமைப்பையும் சென்றடையச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். மிகத் திறமையானவர்கள் தமது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளும் தளத்தை அமைப்பதற்கு, மைகவ் வினையூக்கியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தரவுகளை திறமையாக ஆராய்ந்து, குடிமக்கள் அளிக்கும் ஆலோசனைகளை, தொடர்டைய துறைகளுடன் பகிர்ந்து கொண்டு, அவை செயலாக்கம் பெறுவதற்கு மைகவ் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இணையம் வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாடு, தொலை தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான இணையமைச்சர் திரு.சஞ்சய் டோட்ரே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலர் திரு.அஜய் சவ்னே, மைகவ்-வின் தலைமை செயல் அதிகாரி திரு.அபிஷேக் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த 2014 ஜூலை 26-ந் தேதி துவக்கப்பட்ட மைகவ் குடிமக்கள் பங்கேற்பு தளமானது, இந்திய குடிமக்கள், ஆட்சிக்கான தமது ஆலோசனைகளை வழங்கும் தொகுப்பு இணையதளமாக விளங்குகிறது.  



(Release ID: 1641480) Visitor Counter : 115