வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அசாம் முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியதுடன் வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் வளர்ச்சி நிதியிலிருந்து தேவையான அனைத்து வெள்ள நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

Posted On: 26 JUL 2020 2:08PM by PIB Chennai

மத்திய மாநில (சுயாதீனப் பொறுப்பு) வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி (DoNER), MoS பிரதமர் அலுவலகம் (PMO) பணியாளர்கள், பொதுக் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளின் அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், இன்று அசாம் முதலமைச்சர், திரு. சர்பானந்த் சோனாவாலுடன் தொலைபேசியில் பேசியதுடன் இடைவிடாத மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உள்கட்டமைப்பு சேதங்களை மீட்டெடுக்கவும் சரிசெய்யவும் வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் (DoNER) வளர்ச்சி நிதியிலிருந்து தேவையான அனைத்து வெள்ள நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

பின்னர், டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் (DoNER) உதவியுடன் வடகிழக்குக் கவுன்சில் (NEC), தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ளத்தை அடுத்து, சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்கும், சரிசெய்வதற்கும் சாத்தியமான எந்த உதவியையும் வழங்கும் என்று கூறினார். .

 

மேலும், டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சி அமைச்சகம் அரசு பிற நிதிஆதாரங்களையும், பிற உதவிகளையும் ஒருங்கிணைக்கும். மேலும், வடகிழக்கு மக்களின் நல்வாழ்வும் அக்கறையும் மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் தெரிவித்தார்.

 

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சர் அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வெள்ள நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இது குறித்து தனிப்பட்ட முறையில் விசாரித்து மேலதிக நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாகக் தெரிவித்தார்.

 

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி (DoNER) அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், தான் அந்தந்த முதலமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

 

அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் 30 மாவட்டங்களில் 56 லட்சம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது, இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாக உள்ளது என்று வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி (DoNER) அமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று பெரும் அலைகள் ஏற்பட்டு, சாதாரண வாழ்க்கைக்கு பெரும் சேதம் மற்றும் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், அசாம் மாநிலத்தின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது, இதன் காரணமாக தற்போது நடந்துகொண்டிருக்கும் கோவிட் -19 தொற்றுநோயுடன்  அஸ்ஸாம் இரட்டை சவால்களை எதிர்கொள்கிறது. மேலும், இந்த வெள்ளம் மனித உயிர்களையும், செழிப்பான வனவிலங்குகளையும் பாதித்துள்ளது என்றார்.

 

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். அத்துடன் மேம்பட்ட தொழில் நுட்ப உதவியுடன், காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து விலங்குகளை மீட்பதற்கும் அரசு தனது சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றார்.

 

இந்த இயற்கைப் பேரழிவைச் சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன என்று அமைச்சர் கூறினார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும் தினசரி நிலைமையை கண்காணித்து வருகிறது என தெரிவித்தார்.

 

                                         <><><><><>



(Release ID: 1641392) Visitor Counter : 137