நிதி அமைச்சகம்

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு சிறப்புப் பணப்புழக்கத் திட்டம்: அமலாக்க நிலவரம்

Posted On: 24 JUL 2020 8:19PM by PIB Chennai

2020, மே 13 அன்று மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனால் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழான அறிவிப்புகளில் ஒன்றன் தொடர்ச்சியாக வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி சிறப்புப் பணப்புழக்கத் திட்டம் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது.

நிதிப்பிரிவுக்கு அமைப்பு ரீதியாக ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்க சிறப்பு நோக்க அமைப்பின் (எஸ்பிவி) மூலம்  வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களின்  பணப்புழக்கத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது. 2020, ஜூலை 23 நிலவரப்படி ரூ. 3090 கோடி தொடர்புடைய ஐந்து (5) முன்மொழிவுகள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 13776 கோடி நிதி கோரி பெறப்பட்டுள்ள 35க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

எஸ்எல்எஸ் அறக்கட்டளை எனும்  எஸ்பிஐ மூலதனச் சந்தைகள் நிறுவனத்தால் (எஸ்பிஐசிஏபி) அமைக்கப்பட்ட எஸ்பிவி மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

(முதலீட்டை மையமாகக் கொண்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் நீங்கலாக) இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934ன் கீழ் ஆர்பிஐயுடன் பதிவுசெய்துள்ள நுண் நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட வங்கியல்லாத எந்த நிதிநிறுவனங்களும் தேசிய வீட்டுவசதி வங்கிச் சட்டம், 1987ன் கீழ் தேசிய வீட்டுவசதி வங்கியுடன் பதிவு செய்து கொண்டுள்ள எந்த வீட்டுவசதி நிதி நிறுவனங்களும், குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் இநதத் திட்டத்திலிருந்து நிதிபெறும் தகுதியுடையவை. அறக்கட்டளையால் சந்தாதாரர்கள் சேர்ப்புக்காக 3 மாதங்களுக்கு இந்தத் திட்டம் நீடித்திருக்கும். கடன்பத்திரங்களின் முதல் மற்றும் இரண்டாம் நிலை சந்தைக் கொள்முதல்களையும்  வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்களின் குறுகிய காலப் பணப்புழக்கப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் கோரிக்கைகளையும் இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. எனவே 90 நாள் முதிர்ச்சி மிகுதியுடன் தங்களின் நிரந்தர முதலீடுகளை வெளியேற்றக் காத்திருக்கும் சந்தைப் பங்கேற்பாளர்களும் கூட எஸ்எல்எஸ் அறக்கட்டளையை அணுகலாம்.



(Release ID: 1641202) Visitor Counter : 205