ரெயில்வே அமைச்சகம்

ரேடியோ அலைவரிசை அடையாள டேக்-கை அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும் 2022 டிசம்பருக்குள் பொருத்த ரயில்வேத் துறை திட்டம்

प्रविष्टि तिथि: 24 JUL 2020 2:55PM by PIB Chennai

ரேடியோ – அலைவரிசை அடையாள டேக்குகளை (ஆர்எஃப்ஐடி) அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளிலும், 2022 டிசம்பர் மாதத்திற்குள் பொருத்தி முடிப்பதென ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. இது அனைத்து சரக்கு ரயில் பெட்டிகளின் தடத்தைக் கண்டறிய உதவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 23,000 சரக்குப் பெட்டிகளுக்கு டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றால் இந்தப் பணி சிறிது மந்தப்பட்டாலும், தொடர்ந்து வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ரயில்வேத் துறை சரக்கு ரயில் பெட்டிகள் தொடர்பான தகவல்களை பணியாளர்களைக் கொண்டு பராமரித்து வந்தாலும் இவற்றில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆர்எஃப்ஐடி கருவிகளால் சரக்குப் பெட்டிகள் மற்றும் எஞ்சின்கள் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறிய முடியும்.


(रिलीज़ आईडी: 1640906)
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Odia , Malayalam , English , Hindi , Marathi , Manipuri , Bengali , Punjabi , Telugu