எரிசக்தி அமைச்சகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்துகொள்வதற்கான பொதுவிற்பனைக்கூடம் ஒன்றை மத்திய மின்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

Posted On: 20 JUL 2020 6:51PM by PIB Chennai

எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கவும், மின் பயன்பாட்டிலான போக்குவரத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்துகொள்வதற்கான விற்பனைக்கூடம் ஒன்றை புதுதில்லியில் உள்ள செம்ஸ்போர்டு கிளப் என்னுமிடத்தில் மத்திய மின்துறை, புதிய புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறை அமைச்சர் திரு.ஆர் கே சிங் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்த மின்னேற்ற விற்பனைக்கூடம், மின்சார இயக்கத்தின் மூலமான போக்குவரத்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கக் கூடிய வசதி கொண்டதாக மாறுவதற்கான ஒரு வாய்ப்பு என்றார்.“ இதுபோன்ற புதிய முயற்சிகள், மின்சாரப் போக்குவரத்து சுற்றுச்சூழலை நாட்டில் உருவாக்குவதற்கு இன்றியமையாதது. ஆற்றல் திறன் சேவை லிமிடெட் (Energy Efficiency Services Limited – EESL), புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (New Delhi Municipal Council - NDMC).ஆகிய நிறுவனங்களுக்கு எனது பாராட்டுக்கள்என்று அமைச்சர் கூறினார்.

 

இந்தியாவில் மின்சார வாகன சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பணிகளை இ இ எஸ் எல் முன்னின்று செயல்படுத்துகிறது. மின்சார வாகனங்களை வாங்குவது, பொதுமக்களுக்கான மின்னேற்ற நிலையங்களை (Public Charging Station - PCS).அமைப்பதற்கான புதிய வணிக உத்திகளை அடையாளம் காண்பது போன்ற பணிகளை இ இ எஸ் எல் மேற்கொண்டு வருகிறது.எஸ் எல் நிறுவனம், என் டி எம் சி அமைப்புடன் இணைந்து மத்திய தில்லியில் இந்தியாவிலேயே முதன்முதலாக பொதுமக்களுக்கான மின்னேற்ற விற்பனைக்கூடத்தை அமைத்துள்ளது. இந்த மின்னேற்ற விற்பனைக்கூடத்தில் பல்வேறு வரையறைகளுக்குப் பொருந்துகின்ற வகையிலான 5 மின் வாகன மின்னேற்ற தளங்கள் இருக்கும்.

 

குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தும் அறைகளில் உள்ள காற்றின் தரத்தைப் பாதுகாப்பிலும் பயன்பாட்டிலும் மேம்படுத்தும் வகையிலான குளிர்சாதன வசதி ரெட்ரோஃபிட் RAISE (Retrofit of Air-conditioning to improve Indoor Air Quality for Safety and Efficiency - RAISE) என்ற தேசிய திட்டத்தையும் மத்திய மின்துறை அமைச்சர் திரு.ஆர் கே சிங் இன்று துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் பேசிய திரு.ஆர்கே சிங் இந்த ஆர் ஏ ஐ எஸ் RAISE  திட்ட முயற்சியின் மூலமாக நாடு முழுவதும் பணியிடங்களில், காற்றின் தரம் குறைவாக உள்ளதை அகற்ற முடியும் என்றும், பணியிடங்களை சுகாதாரமாகவும் பசுமையாகவும் மாற்றும் வழிமுறைகளைக் கண்டறிவதற்கான முன்னோடி திட்டமாக இது அமையும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.“இந்தத் திட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். இ எஸ் எல் மற்றும் USAID  அமைப்புகள் தங்களது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார். இந்த இரண்டு முயற்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உறுதியான எரிசக்தி பிரிவை மேம்படுத்துவது ஆகியவற்றில் உறுதிபூண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இ இஎஸ்எல் மற்றும் இதர பங்குதாரர்கள் நான் உறுதி ஏற்கிறேன் என்று #ஐகமிட் இயக்கத்தில் கூறியதுபோல மீண்டும் உறுதி பூண்டுள்ளன.

******(Release ID: 1640028) Visitor Counter : 278