அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா - அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஒத்துழைப்பின் மிகப்பெரும் சாதனைகள், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்தல் குறித்த அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை.
Posted On:
18 JUL 2020 11:42AM by PIB Chennai
மாற்றியமைக்கப்பட்ட மின் உற்பத்தி குறித்த ஆராய்ச்சிக்கான புதிய முறைகளை இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இவை அதிமுக்கியமான கரியமிலவாயு (sCO2) மின்சுழற்சி மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமிப்பது (CCUS) உள்ளிட்ட அதிநவீன நிலக்கரித் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் இருக்கும்.
இந்தியா - அமெரிக்கா இடையே முக்கியத்துவம் வாய்ந்த எரிசக்தி ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள், முக்கிய சாதனைகளைப் பட்டியலிடுவது, ஒத்துழைப்புக்கான புதிய பகுதிகளைத் தேர்வு செய்வது ஆகியவை குறித்து ஜூலை 17, 2020-இல் நடைபெற்ற அமைச்சர்கள் மட்டத்திலான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் டான் புரூய்லெட்டே, இந்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்குத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர், இந்தியப் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்குத்துறை அமைச்சர் ஆகியோரைத் தவிர, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஐ ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து, அறிவியல், தொழில்நுட்பத்துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
அதிமுக்கியமான கரியமிலவாயு (sCO2) மின் சுழற்சி மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல், சேமித்தல் (CCUS) உள்ளிட்ட அதிநவீன நிலக்கரித் தொழில்நுட்பங்கள் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்ட மின் உற்பத்தி குறித்த ஆராய்ச்சிக்கான புதிய பகுதிகள் அறிவிக்கப்பட்டன.
பொலிவுறு மின்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு பணிகளை 30 இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களைக் கொண்ட கூட்டமைப்பு செயல்படுத்தும்.
சமூகத்தால் ஏற்றுக்கொள்ளத்தக்க பொலிவுறு மின் கட்டமைப்பு முறைகள், பகிர்ந்தளிக்கப்பட்ட எரிசக்தி ஆதாரங்கள், பகிர்மான நிறுவனங்கள் என்ற முறையில் பகிர்மான அமைப்பு முறைகளின் ஒருங்கிணைந்த தீர்வு முறை மற்றும் தற்போதைய பங்கு ஆகியவற்றுக்கான கொள்கை முடிவுகள்
தூய்மையான நிலக்கரித் தொழில்நுட்பங்கள், அதிமுக்கியத்துவம் வாய்ந்த கார்பன் டையாக்சைடு (sCO2) மின்சுழற்சிகள் மற்றும் கார்பனை ஈர்த்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்தல் (CCUS) ஆகிய தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பொது முக்கியத்துவம் அளித்தல்.
(Release ID: 1639608)
Visitor Counter : 215