நிதி அமைச்சகம்

மத்திய நேரடி வரி வாரியம் COVID-19 தொற்றுநோய்களின் போது வரி செலுத்துவோருக்கு உதவ இதுவரை 71,229 கோடி ரூபாய் திரும்ப அளித்துள்ளது

Posted On: 17 JUL 2020 6:00PM by PIB Chennai

மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) , கோவிட் -19 தொற்று நோய்களின் போது பணப்புழக்கத்திற்காகவும், வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காகவும், ஜூலை 11, 2020 வரை 21.24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு .71,229 கோடி மதிப்புள்ள பணத்தைத் திருப்பி அளித்துள்ளது.  ஏப்ரல் 8ஆம் தேதி அரசாங்கம் வெளியிட்ட முடிவு நிலுவையில் இருப்பதால், நிலுவையில் உள்ள வருமான வரியை கூடுமான வரை விரைவாகத் திருப்பி அளித்துள்ளது.

இந்த கோவிட் – 19 நெருக்கடி காலகட்டத்தில் வருமான வரி செலுத்துவோரில் 19.79 லட்சம் பேருக்கு 24,603 கோடி ரூபாயும், கார்ப்பரேட்களில் 1.45 லட்சம் நிறுவனங்களில்  46,626 கோடி ரூபாயும் வருமான வரித்துறையால் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் வரி தொடர்பான சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும், கோவிட் - 19 தொற்றுநோய்களின் இந்த கடினமான காலங்களில், வரி செலுத்துவோர் பலரும் தங்கள் வரி கோரிக்கைகள் மற்றும் பணத்தைத் திருப்பிச் செலுத்துவது முடிந்தவரை விரைவாக இறுதி நிலையை அடைவதைக் காணக் காத்திருக்கிறார்கள்.

மேலும், வரி கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்து பணத்தைத் திரும்பப் பெறுவதும், முன்னுரிமையின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது ஆகஸ்ட் 31, 2020 க்குள் நிறைவடையும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. . மேலும், திருத்தங்களுக்கான அனைத்து விண்ணப்பங்களும், மேல்முறையீட்டு ஆர்டர்களை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து விண்ணப்பங்களும் வருமான வரி வணிக விண்ணாப்ப செயலியில் பதிவேற்றப்பட வேண்டும். திருத்தம் மற்றும் மேல்முறையீட்டு விளைவு ஆகியவற்றின் அனைத்து வேலைகளும் வருமான வரி வணிக விண்ணப்ப செயலியில் மட்டுமே செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர், தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விரைவாக செயலாற்ற, வருமான வரித் துறையின் மின்னஞ்சல்களுக்கு உடனடி பதிலை வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக வரி செலுத்துவோரிடமிருந்து வரும் விரைவான பதில், வருமான வரித்துறை பணத்தைத் திரும்ப அளிப்பதில் விரைவாகச் செயல்பட உதவும். பல வரி செலுத்துவோரின் திருத்தம், முறையீட்டு விளைவுகள் அல்லது வரி வரவுகளுக்காக மின்னணு முறையில் தங்கள் பதில்களை சமர்ப்பித்துள்ளனர். இவை காலவரையறைக்கு உட்படுத்தப்படுகின்றன. அனைவருக்கும் பணம் இணையம் மூலம் நேரடியாக வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்குகளில் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது..

****



(Release ID: 1639454) Visitor Counter : 198