அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
எஸ் என் போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு கோவிட்-19 தொழில்நுட்பங்களை தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் மாற்றம் செய்தது.
प्रविष्टि तिथि:
17 JUL 2020 2:12PM by PIB Chennai
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி நிறுவனமான எஸ். என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு கோவிட்-19 கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை மாற்றம் செய்ய, திருவாளர்கள் பால்மெக் இன்ப்ராஸ்டிரக்சர் பிரைவேட் லிமிடெட் கொல்கத்தாவுடன் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நிறுவனமான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.
எஸ். என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையத்தால் உருவாக்கப்பட்டு தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தால் மாற்றம் செய்யப்பட்ட இரண்டு தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:
1. வசதியான மற்றும் சுகாதாரமான சுவாசத்துக்காக மூச்சை வெளியேற்றும் குழாய் மற்றும் துகள் பொருள்களைத் தடுக்கும் வடிகட்டி இணைக்கப்பட்ட செயல்மிகு மூச்சு விடும் கருவி, மற்றும்
2. வெளிவரக்கூடிய நுண்ணுயிர் அடுக்கு கொண்ட நீண்ட நேரம் தாங்கக்கூடிய சிறிய கிருமி நாசினி.
கரியமில வாயுவின் மறுசுவாசம், மூச்சு வெளியிடும் போது ஏற்படக்கூடிய ஈரப்பதம், முகக்கவசத்துக்குள் இருக்கும் வியர்க்கும் மற்றும் சூடான சூழல் ஆகியவற்றுக்கான புதுமையான தீர்வைக் கொண்டது செயல்மிகு மூச்சுவிடும் முக்கவசம் ஆகும். முகக்கவசம் அணிந்துள்ள நபரின் பேச்சின் தெளிவை இது மேம்படுத்தி, வசதியான, சுகாதாரமான சுவாசத்துக்கு உதவி, காற்று மூலமாகப் பரவும் தொற்றுகளில் இருந்து அணிபவரை பாதுகாக்குகிறது.
பொது கிருமிநாசினிகளை அடிக்கடி உபயோகிப்பதால் ஏற்படும் தோலின் ஈரப்பதம் குறைதல் மற்றும் பாதுகாக்கும் பணியோடு இல்லாமல் உடனடியாக நுண்ணுயிர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும் பொது கிருமிநாசினிகளின் தன்மை ஆகியவற்றுக்கான தீர்வு நீண்ட நேரம் தாங்கக்கூடிய சிறிய கிருமி நாசினி ஆகும். வசதியான மற்றும் சுகாதாரமான நீண்ட நேரக் கைத் தூய்மைக்கு இந்த புதுமையான கிருமி நாசினி உறுதியளிக்கிறது.
*****
(रिलीज़ आईडी: 1639419)
आगंतुक पटल : 305