மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
சிபிஎஸ்இயின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன; திருவனந்தபுரம் பிராந்தியத்தில் அதிக தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது
Posted On:
15 JUL 2020 3:36PM by PIB Chennai
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று அறிவித்தது. அனைத்து பிராந்தியங்களிலும் 99.28% தேர்ச்சி சதவீதத்துடன் திருவனந்தபுரம் சிறப்பாக முதலிடத்திலும், சென்னை மண்டலம் 98.95% தேர்ச்சி வீதத்துடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு 98.23% தேர்ச்சி வீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மொத்தம் 18, 73,015 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 17, 13,121 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.46 ஆகும்.
தேர்வு நடந்த காலம்
|
15 பிப்ரவரி 2020 to 20 மார்ச் 2020
|
தேர்வு முடிவு அறிவித்த தேதி
|
15 ஜூலை 2020
|
மொத்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை (முழு பாடங்கள்)
|
வருடம்
|
பள்ளிகளின் எண்ணிக்கை
|
தேர்வு மையங்களின் எண்ணிக்கை
|
2019
|
19298
|
4974
|
2020
|
20387
|
5377
|
************
(Release ID: 1638971)
Visitor Counter : 220