உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இன்று உலக இளையோர் திறன்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

Posted On: 15 JUL 2020 3:01PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா உலக இளையோர் திறன்கள் தினத்துக்கான தனது வாழ்த்துக்களை இன்று தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ் திறன் இந்தியா இயக்கத்தின் 5 ஆண்டு பணிகளை இந்தத் தருணம் குறிப்பிடுகிறது என்று திரு அமித்ஷா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சரியான தொழில்திறன்களை அளித்து அவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான அதிகாரத்தை திறன் இந்தியா இயக்கம் அளிக்கிறது. அவர்களிடையே தொழில்முனைவு ஆர்வத்தைத் தூண்டுவதில் இது மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வேலை தேடுபவர்களை வேலை அளிப்பவர்களாக மாற்றுவதற்கான ஊக்கத்தை அளிப்பதன் மூலம் திறன் இந்தியா இயக்கமானது பிரதம மந்திரியின் சுயசார்பு இந்தியா என்ற கனவை  காலப்போக்கில் நனவாக்கும் என்று திரு அமித்ஷா தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்திய அரசின் திறன் இந்தியா இயக்கம் என்ற முன்னெடுப்பு நடவடிக்கையானது நாட்டில் உள்ள இளைஞர்களுக்குப் பொருத்தமான தொழில் திறன்களை அளித்து அவர்களை மேலும் வேலைக்கு ஏற்றவர்களாக மாற்றவும் பணியிடச் சூழலில் அதிக உற்பத்தித்திறன் கொண்டவர்களாக மாற்றவும் தொடங்கப்பட்டுள்ளது. திறன் இந்தியா இயக்கமானது பல்வேறு தொழில் பிரிவுகளில் பயிற்சிகளை அளிக்கின்றது. தேசிய தொழில்திறன் தகுதிக்கான சட்டகத்தின் கீழ் தொழிற்பிரிவினர் மற்றும் அரசாங்கம் என இரண்டு தரப்பினரும்  அங்கீகரிக்கும் தரநிலைக்கு ஏற்ப இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

 

*****

 


(Release ID: 1638968)