உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் புதிய அமர்வுக்கான சேர்க்கை செயல்முறையைத் தொடங்குகிறது

Posted On: 15 JUL 2020 1:07PM by PIB Chennai

உத்திரப்பிரதேசம் மாநிலம், அமேதியில் உள்ள இந்தியாவின் ஒரே விமானப் பல்கலைக்கழகமான, ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் (RGNAU), 2020 ஆம் ஆண்டு படிப்புகளுக்கான புதிய அமர்வு சேர்க்கை செயல்முறையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. பாடநெறிகள்: விமான சேவைகள் மற்றும் விமான சரக்கு சேவைகளில் இளங்கலை மேலாண்மை படிப்பு (BMS) மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் முதுகலை டிப்ளமோ என இரண்டு பிரிவுகளுக்கு சேர்க்கை செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்பிற்காக இணையம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி, ஜூலை 29 2020. ஆர்வமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக வலைத்தளமான www.rgnau.ac.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏவியேஷன் மற்றும் ஏர் கார்கோவில் இளங்கலை மேலாண்மை படிப்பு (BMS) என்பது லாஜிஸ்டிக்ஸ் திறன் கவுன்சிலுடன் இணைந்து மூன்று ஆண்டு பயிற்சி பெறுவதையும் உள்ளடக்கிய பட்டப்படிப்புத் திட்டமாகும். மூன்று முழு ஆண்டுகளும் வழங்கப்படும் பாடநெறியில் விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள், சரக்கு விமான சேவை, விமானப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு (MRO), விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தரை சேவை நிறுவனங்களுடன் பணிபுரியும் பயிற்சியையும் உள்ளடக்கியது.

முதுகலை டிப்ளோமா (PGDAO)  GMR ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து 18 மாத பாடநெறி, விமான நிலைய செயல்பாடுகளைப் பற்றி நடத்தப்படும். பாடத்திட்டத்தின் படி, பல்கலைக்கழக வளாகத்தில் 12 மாத வகுப்பறை பயிற்சி மற்றும் GMR விமான நிலையங்களில் 06 மாத இன்டர்ன்ஷிப் திட்டம் ஆகியவை அடங்கும்.

இரண்டு படிப்புகளுக்கும், RGNAU வலைதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட வேண்டும் http://www.rgnau.ac.in. விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 950 ரூபாயாகவும், எஸ்.சி / எஸ்.டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 475 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் திருப்பிச் தப்பட மாட்டாது; எந்தவொரு வங்கி அல்லது கட்டண நுழைவாயில் சேவை கட்டணங்களையும் விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும்.

இரு படிப்புகளுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது ஆகஸ்ட் 16 , 2020 ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய அளவில் நடத்தப்படும், (OMR - Optical mark recognition) அடிப்படையிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இருக்கும்.

***** 


(Release ID: 1638774) Visitor Counter : 151