சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சாலைக் கட்டுமான இயந்திரங்களுக்கும், நிலத்தை தோண்டும் கனமான இயந்திரங்களுக்கும் ஓட்டுனர் உரிமம் / பதிவை வலியுறுத்த வேண்டாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 13 JUL 2020 8:37PM by PIB Chennai

கனமான சாலைக் கட்டுமான இயந்திரம் என்பது மோட்டார் வாகனம் அல்ல என்றும், இது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வராது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே இத்தகைய இயந்திரங்களுக்கு வாகன பதிவையோ, ஓட்டுனர் உரிமத்தையோ பெறுமாறு வலியுறுத்த வேண்டாம் என்று இந்த அமைச்சகம், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், சாலைக் கட்டுமான மற்றும் மறுசீரமைப்பு இயந்திரம், மறுசுழற்சி இயந்திரங்கள், மண்ணை சமப்படுத்தும் இயந்திரம் ஆகியவற்றை மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் 1989-ன் கீழ் பதிவு செய்வது தொடர்பான பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்த அமைச்சகம் தனது கடிதத்தில், மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 2 (28)-ன் கீழ் சாலைகளில் ஓடுவதற்கான பயன்பாட்டுக்கு உள்ள வாகனங்களை மட்டுமே குறிப்பிடுவதாகவும், சாலைகளை சீரமைப்பது போன்ற சிறப்புப் பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. எனவே இவற்றுக்கு ஓட்டுனர் உரிமம் அவசியம் இல்லையென்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



(Release ID: 1638500) Visitor Counter : 207