மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, திருவனந்தபுரம் பிராந்தியத்தில் அதிக தேர்ச்சி விகிதம்

Posted On: 13 JUL 2020 8:30PM by PIB Chennai

மேல்நிலைக் கல்விக்கான மத்திய வாரியம் (சிபிஎஸ்சி) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 97.67 சதம் தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் பிராந்தியம் முதல் இடத்தையும், 97.05 சதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 96.17 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 11,92,961 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 10,59,080 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 88.78 சதமாகும். இது கடந்த ஆண்டை விட 5.38 சதம் கூடுதலாகும்.

சிபிஎஸ்சி, தேர்வு முடிவுகளில், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடரை நீக்கி விட்டு “திரும்பவும் எழுதுவது அவசியம்” என்ற சொற்றொடரை சேர்க்கத் தீர்மானித்துள்ளது. எனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு அளிக்கும் ஆவணங்களிலும், அதன் இணையதளத்திலும், “தேர்ச்சி அடையவில்லை” என்ற சொற்றொடர் இனி இடம் பெறாது.

மேலும் விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1638385



(Release ID: 1638496) Visitor Counter : 155