எரிசக்தி அமைச்சகம்
என் ஹெச் பி சி நிறுவனம்இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியது
Posted On:
13 JUL 2020 7:01PM by PIB Chennai
இந்தியாவின் முதன்மையான நீர்மின் நிறுவனமும், மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘மினி ரத்னா- பிரிவு 1’ பொதுத்துறை நிறுவனமுமான தேசிய நீர்மின் நிறுவனம் - National Hydroelectric Power Corporation – NHPC) ஃபரிதாபாத் மீட் டவுன் பகுதி ரோட்டரி கிளப்புடன் இணைந்து 12.7.2020 அன்று ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய நீர்மின் நிறுவனக் குடியிருப்புப் பகுதியில் இரத்ததான முகாம் ஒன்றை நடத்தியது.
தேசிய நீர்மின் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.ஏ.கே.சிங், அவரது மனைவி திருமதி சுதா சிங் ஆகியோர் தேசிய நீர்மின் நிறுவனத்தின் இயக்குநர் (பணியாளர் நலன்) திரு. எம் கே ஜெயின், இதர மூத்த அதிகாரிகள் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முன்னிலையில் முகாமைத் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய திரு ஏ.கே.சிங், உலகையே பாதித்துள்ள கோவிட்-19 நோய்க்காலத்தில் மருத்துவமனைகளில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், இரத்த வங்கிகளுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக தேசிய நீர்மின் நிறுவனம் இந்த ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். இந்த முயற்சியைப் பாராட்டிய அவர், இந்த உயரிய நோக்கத்திற்காக தேசிய நீர்மின் நிறுவன ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த முகாமிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. மொத்தம் எழுபத்தைந்து யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ஃபரிதாபாத் மிட் டவுன் ரோட்டரி கிளப் அலுவலகப் பொறுப்பாளர்கள், தலைவர் திரு. பங்கஜ்கர்க், செயலர் டாக்டர். ஆஷிஷ் வர்மா பொருளாளர் திரு சச்சின் கோஸ்லா ஆகியோர், இந்த முயற்சியை எடுத்து, இந்த முகாமை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றியமைக்காக தேசிய நீர்மின் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
தேசிய நீர்மின் நிறுவனம் கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தனிநபர் பாதுகாப்புக் கவச உடைகள், முகக்கவசங்கள், சுத்திகரிப்பான்கள் வழங்குதல்; தொற்று நோய் தடுப்புப்பணிகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் உருவாக்குதல், தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளவர்களுக்கான ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான போர்ட்டபிள் செயற்கை சுவாசக்கருவிகள், அவசரகால மீட்பு டிராலிகள், கிராஷ் கார்ட், இரத்த ஆய்வுக்கருவிகள், அல்ட்ராசவுண்ட் கருவிகள் மயக்கமருந்து அளிப்பதற்கான பணிக்கூடங்கள் ஆகியவற்றை அளித்து உதவி வருகின்றது. இந்தப் பெருந்தொற்று காலத்தில், தனது மருத்துவக்குழுவினர் மூலமாக, திட்ட மருத்துவமனைகளிலும், டிஸ்பென்சரிகளிலும் தேசிய நீர்மின் நிறுவனம், 24 மணி நேர மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது
(Release ID: 1638405)
Visitor Counter : 220