சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய பொருளாதார நடைபாதைத் திட்டங்களை திரு கட்காரி துவக்கி வைக்கிறார்; அடிக்கல் நாட்டுகிறார்.

Posted On: 13 JUL 2020 5:04PM by PIB Chennai

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகள் துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்காரி, ஹரியானாவில் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பொருளாதார நடைபாதைத் திட்டத்தின் கீழ், பல்வேறு நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களை 14 ஜூலை 2020 அன்று துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். இணைய வழியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஹரியானா முதல்வர் திரு மனோகர் லால் தலைமை வகிப்பார்.

 

நெடுஞ்சாலை 334Bயில் 1183 கோடி ரூபாய் செலவிலான 35.45 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை ரோஹ்னா/ஹசன்சங்கர்ஹிலிருந்து ஜாஜார் வரையிலான பகுதி; தேசிய நெடுஞ்சாலை 71இல்,  857 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை பஞ்சாப் அரியானா எல்லையிலிருந்து ஜிண்டு பகுதிவரை; தேசிய நெடுஞ்சாலை 709 இல் 200 கோடி ரூபாய் செலவில் 85.36 கிலோமீட்டர் 2 வழிப்பாதை ஜிண்டு -கர்னால்; ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

 

8650 கோடி ரூபாய் செலவிலான எட்டுத் தொகுப்புகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 152D யில் இஸ்மாயில்பூரிலிருந்து நர்ணால் வரை கிரீன் ஃபீல்ட் பசுமை வயல் விரைவு வழி 227 கிலோ மீட்டர் விரைவு வழிப்பாதை; 1524 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை 352 Wவில், 46 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை; குருகிராம் பட்டோடி ரேவாரி பகுதி; 928 கோடி ரூபாய் செலவில் பைபாஸ்; 1057 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை 11-இல் ரேவாரி அட்டேலி மண்டி பகுதியில் 30.45 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை; தேசிய நெடுஞ்சாலை 148B யில் 40.8 கிலோமீட்டர் ஆறு வழிச்சாலை நர்ணால் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை 11-இல் 1380 கோடி ரூபாய் செலவில் நர்ணால் முதல் அட்டேலிமண்டி பகுதி;

 

தேசிய நெடுஞ்சாலை 352A வில் 1207 கோடி ரூபாய் மதிப்பிலான(தொகுப்பு- ஒன்று, பசுமை வயல் ஒருங்கிணைப்பு) 40.6 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை; தேசிய நெடுஞ்சாலை 352 A வில் 1502 கோடி ரூபாய் செலவிலான கொஹானா - சோனிபட் பிரிவில் 38.2 3 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதையும்; 1580 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 334B யில்,உத்தரப்பிரதேசம்-ஹரியானா எல்லையிலிருந்து ரோஹாவிற்கு 40.47 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை ஆகியவை உட்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும்.

 

இந்தத் திட்டங்களின் மூலமாக ஹரியானா மாநில மக்களுக்கு மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலத்தின் அண்டை மாநிலங்களாகிய பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற பல இடங்களுக்கு சுமுகமாகப் பயணிக்க முடியும். இந்தத் திட்டம் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு எரிபொருள் சிக்கனம், செலவினக் குறைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவும்.

**



(Release ID: 1638356) Visitor Counter : 176