நித்தி ஆயோக்
நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்காக ATL App உருவாக்கும் தொகுப்பை நிதி ஆயோக்கின் அட்டல் புதுமைசிந்தனை லட்சியத் திட்டம் தொடங்கியது.
Posted On:
11 JUL 2020 4:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அழைப்பைச் செயல்படுத்தும் வகையில் இந்திய கைபேசிச் செயலி உருவாக்குதலில் புதுமைச் சிந்தனை சூழல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கான `ATL App உருவாக்கும் தொகுப்பு' ஒன்றை நிதிஆயோக்கின் அடல் புதுமைச் சிந்தனை லட்சியத் திட்டம் (Atal Innovation Mission - AIM) இன்று தொடங்கியுள்ளது.
பள்ளிக்கூட மாணவர்களின் திறன்களை ச் செம்மைப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் உருவான பிளெஜ்மோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ATL App உருவாக்கல் தொகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வரக்கூடிய காலங்களில் அடல் புதுமை சிந்தனை லட்சியத் திட்டத்தின் பெயரில் அடல் சீராக்கல் ஆய்வகங்களின் முன்முயற்சியுடன், செயலிப் பயனாளர் என்ற நிலையிலிருந்து செயலியை உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு நிலைமாற்றம் செய்யும் வகையில் இந்தத் திறன்களை வளர்ப்பது இதன் நோக்கமாகும்.
இந்த முயற்சி பற்றி கருத்து தெரிவித்த நிதி அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அமிதாப் காந்த், கோவிட்-19 பாதிப்பு காரணமாக பெரிய தடங்கல் ஏற்பட்டுவிட்டது என்றும், தினசரி வாழ்வில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தச் சூழ்நிலை கையாளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ATL App உருவாக்கல் தொகுப்பு என்பது முற்றிலும் இலவசமான ஆன்லைன் கல்வித் திட்டமாகும். ஆறு செய்முறைத் திட்டங்களின் அடிப்படையிலான கற்றல் தொகுப்புகள், ஆன்லைனில் வழிகாட்டுதல் அமர்வுகள் இருப்பதால் பல்வேறு இந்திய மொழிகளில் செல்போன் ஆப்களை உருவாக்க இளம் புதுமைச் சிந்தனையாளர்கள் கற்றுக் கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும்.
இந்தத் தொகுப்பை தொடங்கி வைக்கும் மெய்நிகர் நிகழ்ச்சியில் பேசிய அடல் புதுமைச் சிந்தனை லட்சியத் திட்ட இயக்குநரும், நிதிஆயோக் உறுப்பினருமான ஆர். ரமணன், ``நாட்டில் நிறைய மனிதவளம் இருக்கும் நிலையை சாதகமாக்கிக் கொண்டு, உலகத் தரத்திலான தொழில்நுட்பத் தீர்வுகளையும், செயலிகளையும் உருவாக்க வேண்டும். தற்சார்பு பாரதம் செயலி புதுமைச் சிந்தனை சவால் தொடங்குவது என்பது பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் மற்றும் தொழில் துறையில் உள்ளவர்களை உத்வேகப்படுத்தும் அம்சமாக இருக்கும். அடல் புதுமைச் சிந்தனை லட்சியத் திட்டம், நிதிஆயோக் ஆகியவை இப்போது நாடு முழுக்க அடல் சீராக்கல் ஆய்வகங்களுடன் இணைந்துள்ள இளம் சிந்தனையாளர்களிடம் உள்ள செயலி உருவாக்கும் திறன்களைப் பயன்படுத்துவதாக இருக்கும். அதன் மூலம் அதன் பயன்பாட்டை மேம்படுத்தி, தங்களின் புதுமைச் சிந்தனைகள் உரியவர்களைச் சென்றடையும் நிலையை மேம்படுத்த முடியும். எந்த நாட்டிலும் இல்லாத வகையில், பள்ளிக்கூட அளவில் செயலி உருவாக்கலைக் கற்பதற்கான மிகப் பெரிய முன்முயற்சித் திட்டமாக இது இருக்கும் '' என்று கூறினார்.
``இளம் சிந்தனையாளர்களிடம் கற்றல் மற்றும் ஆக்கத் திறனை வளர்ப்பதற்கு, ATL #TinkerfromHome முயற்சியின் ஒரு பகுதியாக, அடல் புதுமைச் சிந்தனை லட்சியத் திட்டம், நிதிஆயோக் ஆகியவை இணைந்து, நாடு முழுக்க உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வளர்ச்சி கண்டுவரும் நவீன கள வசதியை உருவாக்கி கற்க உதவி செய்யவும், செயற்கைப் புலனறிவு, கேம் வடிவமைத்தல் மற்றும் உருவாக்கம், முப்பரிமாண வடிவமைப்பு, வானவியல், டிஜிட்டல் ஆக்கத் திறன்கள் உள்ளிட்ட அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தங்கள் வீடுகளின் சௌகரியம் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலையிலேயே உருவாக்க முடியும்'' என்று அவர் குறிப்பிட்டார்.
(Release ID: 1638039)
Visitor Counter : 335