விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் காணொளிக் காட்சி மூலம் மாநிலங்களுடன் கூட்டம் நடத்தினார்; ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

Posted On: 10 JUL 2020 7:11PM by PIB Chennai

ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கமத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் காணொளிக் காட்சி மூலம் மாநிலங்களுடன் கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார். வேளாண் இணை அமைச்சர்கள், திரு. பர்ஷோத்தம் ருபாலா மற்றும் திரு. கைலாஷ் சவுத்ரி, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் வேளாண் அமைச்சர்கள் மற்றும் வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறையின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, 10,000 விவசாய உற்பத்தி நிறுவனங்களின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கான புதிய செயல்முறை வழிகாட்டுதல்கள் குறித்த கையேட்டை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் வெளியிட்டார். அமல்படுத்ததில் உள்ள முக்கிய விவகாராங்கள் குறித்து மாநிலங்களுடனான உரையாடலின் போது விவாதிக்கப்பட்டது.

 

 

காணொளிக் காட்சி மூலம் பேசிய திரு. நரேந்திர சிங் தோமர், சுய-சார்பு இந்தியா திட்டத்துக்கு ரூ 20 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பை ஒதுக்கீடு செய்து, அதன் கீழ் வேளாண்-வாயில் மற்றும் ஒருங்கிணைப்பு மையங்களில் (தொடக்க வேளாண் கூட்டுறவு அமைப்புகள், விவசாயி தயாரிப்பாளர் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோர்கள், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) உள்ளிட்டவை) வேளாண் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறுவ ரூ 1 லட்சம் கோடி நிதி வசதியை ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். தற்போதைய மொத்த அறுவடையில் சுமார் 15-20 சதவீதம் இருக்கும் வேளாண் தயாரிப்புகள் வீணாதலைத் தடுக்க அறுவடைக்கு பின்பான உள்கட்டமைப்பை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

விவசாயி கடன் அட்டைகளை முழுவதுமாக வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகவும், சுய-சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் 2.5 கோடி விவசாயி கடன் அட்டைகளை இந்த வருடத்தின் இறுதிக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். பிரதமரின் விவசாயிகள் திட்டம் மற்றும் விவசாயிகள் கடன் அட்டைகள் குறித்து பேசிய அவர், மொத்தமுள்ள சுமார் 14.5 கோடி செயல்பாட்டிலுள்ள வேளாண் நிலப் பகுதிகளில், பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் கீழ் 10..5 கோடி நிலப் பகுதிகளைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சுமார் 6.67 கோடி விவசாயிகள் கடன் அட்டைக் கணக்குகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. விவசாயிகள் கடன் அட்டைகளை முழுவதும் வழங்கும் திட்டம் பிப்ரவரி 2020-இல் தொடங்கியப் பிறகு, சுமார் 95 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 75 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

 

2023-24 வரை மொத்தம் 10,000 விவசாய உற்பத்தி நிறுவனங்களின் நிறுவப்பட உள்ளதாகவும் விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 வருடங்களுக்கு ஆதரவு தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின் மதிப்பு ரூ 6,866 கோடி ஆகும். வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாடுவிவசாய உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகள் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் வசதிகளை அளித்தல் ஆகியவற்றுக்கு மாநிலங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளும்,ஆதரவும் அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

 

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00199IX.jpg



(Release ID: 1637972) Visitor Counter : 178