ஜல்சக்தி அமைச்சகம்

மத்திய நீர்வளத்துறை அமைச்சர், திரிபுரா முதலமைச்சருடன் காணொளிக் காட்சி மூலம் விவாதம்

Posted On: 10 JUL 2020 2:42PM by PIB Chennai

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத், திரிபுராவில் நீர் ஆதார இயக்கத்தை அமல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து, முதலமைச்சர் திரு.பிப்லாப் குமார் தேவ் உடன் காணொளிக் காட்சி மூலம் விவாதித்தார். முதன்மைத் திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்த மத்திய அமைச்சர், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மேற்கொண்டு வரும் தொடர் கலந்துரையாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

2024-ஆம் ஆண்டில் தேசிய இலக்கை விஞ்சும் வகையில் 2022-23 ஆம் ஆண்டுக்குள் 100 சதவிகித குடிநீர்க்  குழாய் இணைப்பை வழங்க திரிபுரா திட்டமிட்டுள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 8 லட்சம் கிராமப்புறக் குடியிருப்புகளில் 68,178 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர்க்  குழாய் இணைப்புகள் செயல்பாட்டுக்கு (எப்எச்டிசி) வந்துள்ளன. மீதமுள்ள  4.19 லட்சம் குடியிருப்புகளில் 2.65 லட்சம் வீடுகளுக்கு 2020-21-ல் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்க திரிபுரா திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நீர் விநியோகத் திட்டங்களில் இருந்து 1,178 கிராமங்களில் ‘பிரச்சார முறை’-யில் குடிநீர்க் குழாய் இணைப்பை வழங்கும் பணியைத் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர், முதலமைச்சரை வலியுறுத்தினார்; இதன் மூலம்  சுமார் 7 லட்சம் குடியிருப்புகள் குடிநீர்க்  குழாய் இணைப்பைப் பெற முடியும். மாநிலத்தின் அனைத்துக் குடியிருப்புகளிலும் 2023 ஆண்டுக்குள் குடிநீர்க்குழாய் இணைப்பு வழங்கமுடியும் என்று உறுதி அளித்த முதலமைச்சர், இதன் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்கள் தங்கள் குடியிருப்புகளில் குடிநீர்க் குழாய் இணைப்பைப் பெறமுடியும் என்றார்.

மாநிலத்தின் பங்கு உள்பட 2020-21ஆம் ஆண்டில், 156,61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் செலவு செய்யப்படாத மீதமும் மாநிலத்தின் வசம் உள்ளது, திரிபுராவில் நீர் ஆதார இயக்கத்தை செயல்படுத்துவதற்கு உறுதியளிக்கப்பட்ட 383.45 கோடி உள்ளது. நிதித்திறன் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் நிதி ஒதுக்கீட்டுக்கு மாநிலம் தகுதி பெற்றுள்ளது. 15-ஆவது நிதி ஆணையத்தின் மானியத்தின் கீழ் கடன் சமபங்கு முதலீடுகளுக்கு (பிஆர்ஐ) திரிபுராவுக்கு 1191 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாலும் அதில் 50 சதவீதம் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு பயன்படுத்தபட வேண்டும் என்பதாலும் இந்த நிதியை கிராமப்புற நீர் விநியோகம், பழுப்பு நிற நீர் மேலாண்மை மற்றும் மிக முக்கியமான நீர் வளங்கள் திட்டங்களின் நீண்ட காலச் செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யவேண்டும் என மத்திய அமைச்சர், முதலமைச்சரை கேட்டுக்கொண்டார்.



(Release ID: 1637791) Visitor Counter : 138