நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள மீதமுள்ள உணவு தானியங்களையும் பருப்பு வகைகளையும் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் 31 ஆகஸ்ட் 2020க்குள் விநியோகித்து விடலாம்

Posted On: 09 JUL 2020 6:54PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் திரு.ராம் விலாஸ் பாஸ்வான் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (பிஎம்ஜிகேஏஒய்) மற்றும் சுயசார்பு இந்தியா திட்டங்களின் முன்னேற்றம் குறித்து காணொலிக் காட்சி மூலமாக செய்தியாளர்களிடம் இன்று பேசினார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஐந்து மாத காலங்களுக்கு பிஎம்ஜிகேஏஒய்  திட்டத்தை நீடிப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி எடுத்த முடிவை திரு.பாஸ்வான் வரவேற்றார்.உணவு தானிய விநியோகத்தின் மிகப்பெரிய திட்டங்களான பிஎம்ஜிகேஏஒய் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தை, கோவிட் 19 காலத்தில் எவரும் பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, ஏழை மக்களுக்கும், தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கும் உதவுவதற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கியதாக அவர் கூறினார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இலவச உணவு தானியங்களை விநியோகிப்பதற்கா காலக்கெடுவை 31 ஆகஸ்ட் 2020 வரை கூடுதல் அவகாசம் கொடுக்கலாம் என்ற அமைச்சரவையின் முடிவு குறித்து திரு பாஸ்வான் தெரிவித்தார். நாட்டில் கோவிட்19-னால்  ஏற்பட்டுள்ள பொருளாதார இடையூறுகள் காரணமாக, ஏழை எளிய மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை, இந்த இரு திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்று திரு பாஸ்வான் கூறினார்.

 

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை விநியோகிப்பதை 31 ஆகஸ்ட் 2020 வரை நீடிக்கலாம் என்பது குறித்து பேசிய திரு ராம் விலாஸ் பாஸ்வான், இத்திட்டம் 15 மே 2020 அன்று தொடங்கப்பட்டது; உண்மையான பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு சில காலம் பிடித்தது; எனவே ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்ட 6.39 எல் எம் டி உணவு தானியங்களில் தற்போது மீதமுள்ள உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக, 31 ஆகஸ்ட் 2020 வரை விநியோக காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இலவச உணவு தானியங்களையும், பருப்புகளையும் 31 ஆகஸ்ட் 2020 தேதிக்குள் விநியோகித்து விடலாம் என்று அவர் கூறினார்.

சுய சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்கள், தேவைப்படுகின்ற நிலையில் உள்ள குடும்பங்கள், என் எஃப் எஸ் ஏ மற்றும் மாநில திட்டங்களில் பொது வினியோகத் திட்ட அட்டைகள் இல்லாத மக்கள், ஆகியோருக்கு ஒவ்வொருவருக்கும் 5 கிலோ உணவு தானியமும், ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ முழு பருப்பும் வழங்கப்படுகிறது.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே 6.39 எல் எம் டி உணவு தானியங்களை எடுத்துச் சென்றுள்ளன. மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் இதுவரை 232433 எம்டி உணவு தானியங்களை மே மாதத்தில் 2.24 கோடி பயனாளிகளுக்கும், ஜூன் மாதத்தில் 2.25 கோடி பயனாளிகளுக்கும் வழங்கியுள்ளன. 33620 எம்டி முழு பருப்பு, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 32968 எம்டி முழு பருப்பு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. இதில் 10645 எம்டி விநியோகிக்கப்பட்டு விட்டன.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் 116.02 எல்எம்டி உணவு தானியங்கள் எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் திரு பாஸ்வான் தெரிவித்தார். ஏப்ரல் 2020 மாதத்தில் 37.43 எல் எம்டி (94 சதவிகிதம்) உணவு தானியங்கள் 74.14 கோடிப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு மே மாதம் மொத்தம் 37.41 எல்எம்டி (94% உணவு தானியங்கள்) 73.75 கோடி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 32.44 எல் எம்டி (82%) உணவு தானியங்கள் 64.42 கோடிப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ள.

இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்திற்கு பிதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியம் (அரிசி அல்லது கோதுமை) விநியோகிப்பதற்கான ஒதுக்கீட்டு ஆணை அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், இந்திய உணவுக் கழகம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது என்று அமைச்சர் கூறினார். என் எஃப் எஸ் ஏ பயனாளிகள் 80.43 கோடி பேர் (9.26 கோடி ஏஏஒய் மக்கள் 71.17 கோடி பிஎச்எச் மக்கள் சண்டிகர், புதுச்சேரி, தாத்ரா நாகர்ஹவேலி ஆகிய இடங்களில் டிபிடி பணப் பரிமாற்றத் திட்டப் பயனாளிகள் ஆகியோரை இத்திட்டம் சென்றடையும். மொத்தம் 203 எல் எம் டி உணவு தானியங்கள் 81 கோடிப் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.

பிஎம்ஜிகேஏஒய்-2 திட்டத்தின் கீழ் ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலான ஐந்து மாத காலங்களுக்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 201.1 எல் எம் டி உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 91.14 எல் எம் டி கோதுமை, 109.94 எல்எம்டி அரிசி, இத்திட்டத்தின் கீழ் நான்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமையும், 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அரிசியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

*****


 (Release ID: 1637711) Visitor Counter : 224