சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
"தொற்றுநோய் நம்மைத் தடுக்க அனுமதிக்க முடியாது"; டாக்டர் ஹர்ஷ் வர்தன் கோவிட் -19 தொற்றுநோயின் பின்னணியில் இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பு குறித்து ஸ்வீடிஷ் பிரதிநிதியுடன் விவாதித்தார்.
Posted On:
07 JUL 2020 5:12PM by PIB Chennai
ஸ்வீடன் சுகாதார மற்றும் சமூக விவகார அமைச்சர் திருமதி லீனா ஹாலெங்கிரெனை இன்று இணையம் மூலம் அழைத்த, மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார மற்றும் மருத்துவத்துறையில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.
இரு நாடுகளில் கோவிட்-19 தொற்றின் நிலை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும், அதைக் கையாள்வதற்கான எதிர்காலப் பார்வை குறித்தும் இரு சுகாதார அமைச்சர்களும் விரிவாக விவாதித்தனர்.
டாக்டர் ஹர்ஷ் வர்தன், இந்தோ-ஸ்வீடிஷ் இடையே பல ஆண்டுகளாக உள்ள துடிப்பான நட்பின் காரணாமாக கூட்டாகப் பணிக்குழு மட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட இருதரப்புக் கூட்டங்களைக் கடந்து வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கோவிட் -19, தொற்றுநோயைக் கையாளும் போது இந்தியா கற்றுக்கொண்ட பாடங்கள் குறித்து, டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “இந்தியா 1.35 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு என்றாலும், இந்தியா 61 சதவீததிற்கும் அதிகமான மீட்பு விகிதத்தையும், 2.78 சதவீத இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் 2.5 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆய்வகத்திலிருந்து, கோவிட்-19 ஐக் கண்டறிய பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இப்போது 1100க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் சுறுசுறுப்பான, முன்கூட்டியே மற்றும் தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன் கூடிய மூன்று அடுக்கு கோவிட் சுகாதார உள்கட்டமைப்பில் எந்த நேரத்திலும் வீழ்ச்சியைக் காட்டாத அளவுக்கு கட்டமைப்பு ஆகியவற்றுடன் கணிசமான எண்ணிக்கையிலான படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகியவற்றை உறுதி செய்தது ”என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியா புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார். மேலும், முன்னணியில் இருந்து வழி நடத்திய நமது ஆற்றல் மிக்க மற்றும் தொலை நோக்குள்ள பிரதமராலும், பல்வேறு மட்டங்களில் பின்பற்றப்பட்ட ‘முழு அரசாங்கத்தின்’ அணுகுமுறையால் இது நிகழ்ந்துள்ளது. ஜனவரி 8 முதல், புதிய நோய்க்கிருமி குறித்து சீனா உலகை எச்சரித்த ஒரு நாள் கழித்து, கடல்வழித் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் நுழைவு கண்காணிப்புகளை அரசாங்கங்கள் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டன. இது அதன் சமூகக் கண்காணிப்பை வலுப்படுத்தியதுடன், விரிவான சுகாதார மற்றும் பயண ஆலோசனைகளையும் வெளியிட்டது, மேலும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரையும் வெளியேற்றியது. இந்தியா இப்போது 100 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் இருந்த உற்பத்தி அலகுகளை ஒரு நாளைக்கு 5 லட்சம் என்ற அளவில் உற்பத்தி செய்கிறது, அதே போல் அதன் N95 முகமூடிகள் மற்றும் வென்டிலேட்டர்களின் உற்பத்தியையும் அதிகரித்துள்ளது”. அத்துடன் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்ஸி குளோராகுவினை வழங்கியுள்ளது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஸ்வீடிஷ் பிரதிநிதிக்குத் தெரிவித்தார்.
*********
(Release ID: 1637043)
Visitor Counter : 175