நிதி அமைச்சகம்

மத்திய வருவாய்க் கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் நேரடித் தொடர்பில்லா சுங்கத்தின் மேம்பாடு.

Posted On: 07 JUL 2020 3:49PM by PIB Chennai

சுங்கத்துறையின் உட்புறப் பரிசோதனைத் திறனை மேம்படுத்தி வேகமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிகளுக்கு வழிவகுக்கும் வகையில் மத்திய வருவாய்க் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நிறுவப்பட்ட பல்வேறு புதிய மற்றும் நவீன பரிசோதனைக் கருவிகளை மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் தலைவர் திரு. எம். அஜித் குமார் நேற்று தொடங்கி வைத்தார். "துரித சுங்கம்" எனப்படும் மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் முதன்மைத் திட்டத்தின் கீழ் வரும் "தொடர்பில்லா சுங்கத்தை" ஆதரிக்கும் தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

ரூ 80 கோடி மதிப்புள்ள அதி நவீன உபகரணங்களின் விரிவான மேம்படுத்துதலுக்குப் பிறகு மத்திய வருவாய்க் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் உள்ள பரிசோதனை வசதிகளை வெளிக்காட்டும் வகையில் கையேடு ஒன்றையும் திரு. குமார் வெளியிட்டார். புதுதில்லி, கண்ட்லா, வதோதரா, மும்பை, நவசேவா, கொச்சி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள எட்டு மத்திய வருவாய்க் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் எஸ் / சி 17025:2017-இன் படி ரசாயனப் பரிசோதனைக்காக பரிசோதனை மற்றும் அளவுத்திருத்தத்துக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், புது தில்லி மற்றும் சென்னையில் உள்ள மத்திய வருவாய்க் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் தடயப் பரிசோதனைக்கான (போதைப் பொருள் பரிசோதனைக்காக) NABL அங்கீகாரம் பெற்றவை ஆகும்.

நேரடித் தொடர்பில்லா சுங்கத்தை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகள், தங்களது வங்கிக் கணக்கிலும் அங்கீகரிக்கப்பட்ட வணிகர் எண்ணிலும் (AD Code) மாற்றங்களை ஏற்றுமதியாளர்களே சுயமாக ஐஸ்கேட் எனப்படும் மத்திய சுங்கத்துறையின் மின்னணு நுழைவாயில் மூலம் நிர்வகிக்கக்கூடிய வகையிலும், சுங்க அதிகாரியை அணுக வேண்டியத் தேவை இல்லாமல் ஐஸ்கேட்டில் பதிவு செய்து கொள்ளும் வகையிலும் அதிகாரமளிக்கும். இறக்குமதியாளர்கள் சுங்க அலுவலகங்ளுக்கு நேரில் சென்று கட்டணங்களைச் செலுத்துவதைத் தவிர்க்கும் வகையில், இந்திய சுங்கத்துறை மின்னணு தகவல் பரிமாற்றப் பத்திரங்களின் தானியங்கி பற்று வைத்தல் இன்று அறிவிக்கப்பட்ட முக்கியமான புதுமையாகும். இறக்குமதியாளர்களுக்கு அவர்களின் இறக்குமதிகளில் உதவும் வகையில், பத்திரத்தில் உள்ள மீதித்தொகை இறக்குமதி ஆவணத்தில் இனிமேல் சுட்டிக்காட்டப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடுகள் சுங்கத்துறையில் நேரடித் தலையீட்டைக் குறைக்கும் என்று தலைவர் எடுத்துரைத்தார்.

முக்கியமாக, முகமில்லா மதிப்பீட்டின் முதல் கட்டத்தில் பெங்களூரு மற்றும் சென்னை மண்டலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு முனை இடைமுகத்தின் பலன்களைக் கருத்தில் கொண்டு, 15.07.2020-இல் இருந்து அனைத்து சுங்க அமைப்புகளிலும் துரித சேவை மையங்களை மத்திய மறைமுக வரிகள், சுங்க வாரியம் அமைக்கும். ஆதார நாடு சான்றிதழ்களை அழித்தல் போன்றவற்றுக்காக சுங்கத்துறையால் கேட்கப்படும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க துரித சேவை மையங்கள் மட்டுமே ஒரே நேரடி இடைமுகமாக இனிமேல் இருக்கும். சுங்க அனுமதி செயல்பாடுகளை இது மேலும் எளிமையாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

***
 


(Release ID: 1637014) Visitor Counter : 235