அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில், பிஎஸ்ஐபி உத்தரப்பிரதேச அரசுடன் கைகோர்ப்பு
Posted On:
07 JUL 2020 12:50PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான, பீர்பால் சஹ்னி பேலியோசயின்சஸ் நிறுவனம் (பிஎஸ்ஐபி), கொவிட்-19 தொற்றை உத்தரப்பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்கு அம்மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. லக்னோவில் உள்ள 5 மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்ஐபி கொவிட்-19 மாதிரிகளை பரிசோதிப்பதற்கான பரிசோதனைச் சாலையை அமைப்பதற்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள டிஎன்ஏ பிஎஸ்எல்-2ஏ பரிசோதனைச்சாலை கொவிட்-19-க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியது.
இந்த ஆண்டு மே 2-ந் தேதியன்று, கொவிட் மாதிரிகளின் முதல் அணியை, சந்தவ்லி மாவட்டத்திலிருந்து பிஎஸ்ஐபி பெற்றுக் கொண்டது. அன்று முதல் இந்தப் பரிசோதனைச்சாலை 24 மணி நேரமும் பணியாற்றி, நாளொன்றுக்கு 400 மாதிரிகளை பரிசோதித்து வருகிறது. இன்று வரை 12,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 400-க்கும் கூடுதலானவை கொவிட் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளவையாகும்.
******
(Release ID: 1636969)
Visitor Counter : 198