உள்துறை அமைச்சகம்
தேர்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2020 8:14PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகம், தேர்வுகளை நடத்துவதற்கு, பல்கலைக்கழகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று அனுமதி அளித்துள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு, எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதில், பல்கலைக்கழகங்களின் தேர்வுகால அட்டவணையின்படியும், பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைகளின்படியும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைபடியும் கல்வியாண்டின் இறுதித் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
*******
(வெளியீட்டு அடையாள எண்: 1636956)
வருகையாளர் எண்ணிக்கை : 341