அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

என்ஏடிஎம்ஓ தனது கோவிட்-19 டேஷ்போர்டின் 4வது புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டது

Posted On: 06 JUL 2020 3:27PM by PIB Chennai

இந்திய அரசின் தகவல்  தொழில்நுட்ப அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் தேசிய நிலவரைபட மற்றும் கருத்தாக்க உருபட வரைவியல் கழகமானது (NATMO) தனது அலுவலகப் போர்ட்டலான http://geoportal.natmo.gov.in/Covid19/ என்பதில் கோவிட்-19 டேஷ்போர்டின் நான்காவது புதுப்பிக்கப்பட்ட பதிப்பை 19 ஜுன் 2020இல் வெளியிட்டுள்ளது. 

கோவிட்-19 டேஷ்போர்டின் நான்காவது புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் கீழ்வரும் சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன:

1. கோவிட்-19 உடன் தொடர்புடைய பலதரப்பட்ட தகவல்களை பயனாளி பெறும் வகையிலான ஒற்றை வரைபட சாளரம்.

2. கோவிட் புள்ளி விவரங்கள்: தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், குணமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை, குணமடையும் விகிதம், இறப்பு விகிதம் ஆகிய தகவல்கள் மாநில மற்றும் மாவட்ட வாரியாக தரப்பட்டுள்ளன.  மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள், அதே வரைபடச் சட்டகத்தில் இரத்த வங்கிகள் போன்ற மருத்துவ உள்கட்டமைப்புகள் தொடர்பான தகவலும் கிடைக்கும். 

3. தகவல் தரவைப் பதிவு செய்வதில் பொதுத் தகவல்களில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை நோக்கிச் செல்லும் அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் கோவிட் தொற்றுள்ளவர்கள் மற்றும் அந்த மாவட்டத்தின் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள பயனாளிகள் முதலில் சம்பந்தப்பட்ட மாநிலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேடுதலை விரிவுபடுத்துவதன் மூலம் பயனாளி குறிப்பிட்ட ஒரு சுகாதார மருத்துவமனை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.  முகவரி, வகைப்பாடுகள் மற்றும் நகர இருப்பிடம் போன்ற பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்கள் இன்ஃபோ உபகரணம் மூலம் சுட்டிக் காட்டப்படுகின்றன.  தகவல் தரவைக் காட்சிப்படுத்துவதற்கான வரைபட முன்னுரிமைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தகவல் தரவுக் காட்சியை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தரப்படுகின்றன. 

4. கடந்த 14 நாட்களுக்கான மாநில அளவிலான புள்ளிவிவரங்கள் வரைபடம் மூலம் சித்தரிக்கப்படுகின்றன.  அதிகபட்ச உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 2 மாநிலங்கள் தானாகவே பட்டியலில் காட்டப்படும்.  பயனாளி ஒருவர் வேறு ஒரு மாநிலத் தகவலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் ட்ராப் டவுனில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

 



(Release ID: 1636848) Visitor Counter : 191