விவசாயத்துறை அமைச்சகம்

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் புதிய பரிமாணம்- ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 65 ஆர்டி பண்டா பகுதியில் முதல்முறையாக பெல் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களில் ரசாயனத் தெளிப்பு தொடங்கியது

Posted On: 05 JUL 2020 2:45PM by PIB Chennai

வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் பயிர்கள் சேதமடைவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. நேற்று (04.07.2020), வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் 65 ஆர்டி பண்டா பகுதியில் ஒரு பெல் ஹெலிகாப்டர் தனது முதல் பணியைத் தொடங்கியது.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரசாயனம் தெளிக்கும் அதன் பணியை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில்  உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

2020 ஏப்ரல் 11-ஆம் தேதி துவங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளூர் வட்டார அதிகாரிகளால், 1,35,207 ஹெக்டேர் பரப்பளவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை 3-ஆம் தேதி வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், ஹரியானா, பீகார் ஆகிய மாநில அரசுகளால், 1,13,215.5 ஹெக்டேர் பரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜூலை 3 மற்றும் 4 தேதி இரவில், ஜெய்சால்மர், பார்மர், பிக்கானிர், ஜோத்பூர், நாகாவுர், டவ்சா ஆகிய ஆறு ராஜஸ்தான் மாவட்டங்களிலும், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், உள்ளூர் வட்டார அதிகாரிகளால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது தவிர, உ.பி.யின் ஜான்சி மற்றும் மகோபா மாவட்டங்களில் நான்கு இடங்களிலும், ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், மாநில வேளாண் துறைகளும், சிறு குழுக்களாகவும், பரவலாகக் காணப்பட்ட வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இரவில் ஈடுபட்டன.

*****
 



(Release ID: 1636670) Visitor Counter : 189