கலாசாரத்துறை அமைச்சகம்

2020 ஜூலை 4-ஆம் தேதி ஆசாத பூர்ணிமா தினத்தன்று தர்ம சக்ரா தினக் கொண்டாட்டத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்

Posted On: 02 JUL 2020 6:30PM by PIB Chennai

2020 மே 7 முதல் 16-ஆம் தேதி வரை மெய்நிகர் வேசக் மற்றும் உலகப் பிரார்த்தனை வாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்ததைத் தொடர்ந்து,  சர்வதேச பௌத்தக் கூட்டமைப்பு, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்துடன் சேர்ந்து, வரும் 4-ஆம்தேதி ஆசாத பூர்ணிமா தினத்தை தர்ம சக்ரா தினமாகக் கொண்டாடவுள்ளது. இது சர்வதேச பௌத்த கூட்டமைப்பின் வருடாந்திரக் கொண்டாட்டமாகும்.

 

புத்தர் ஞானமும் விழிப்பும் பெற்று, தர்மசக்ரம், மகாபரி நிர்வாணா நிலையை அடைந்த,  இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தர்ம சக்ரா தினத்தை புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.

 

கலாச்சார அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரஹலாத் சிங் பட்டேல் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றுகின்றனர். அன்றைய தின நிகழ்ச்சிகள் சாரநாத் முலகந்தா குடி விஹாரா, புத்தகயா மகாபோதி கோவிலில் இந்திய மகாபோதி சொசைட்டி, புத்த கயா கோவில் மேலாண்மைக் குழுவுடன் இணைந்து நடைபெறும்.

 

புத்த சங்கத்தின் தலைமை பிக்குகள், உலகம் முழுவதையும் சேர்ந்த பிரபல குருமார்கள், அறிஞர்கள், சர்வதேச புத்தக் கூட்டமைப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

********


(Release ID: 1636083)