மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மருந்துக் கண்டுபிடிப்புப் போட்டி 2020-ஐ மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் இணைந்து தொடங்கி வைத்தனர்

Posted On: 02 JUL 2020 5:03PM by PIB Chennai

மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலம், மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் மருந்துக் கண்டுபிடிப்புப் போட்டியை (ஹாக்கத்தான்) இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே முன்னிலையில் இணைய தளத்தில் இன்று தொடங்கி வைத்தனர்.மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், மற்றும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்த மருந்துக் கண்டுபிடிப்பு நிகழ்வு, மேம்படுத்தப்பட்ட கணினி வளர்ச்சி மையம் (CDAC), மைகவ் (MyGov), ஷ்ரோடிங்கர் (Schrodinger) மற்றும் கெம்ஆக்ஸான் (ChemAxon) ஆகிய பங்குதாரர்களால் ஆதரவளிக்கப்படுகிறது.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு. பொக்ரியால், மருந்துக் கண்டுபிடிப்பு செயல்முறையை ஆதரிக்க தேசிய அளவில் நடைபெறும் முதல் நிகழ்வு இதுவாகும் என்று குறிப்பிட்டார். சர்வதேசத் திறமைகளைக் கவர்வதற்காக, கணினி அறிவியல், வேதியியல், மருந்தகம், மருத்துவ அறிவியல், அடிப்படை அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உலகெங்கிலும் உள்ள தொழில்முறையினர், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த நிகழ்வு திறந்திருக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஹாக்கத்தான்களை நடத்துவதில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துக்கும் பரந்த அனுபவம் உள்ளதாக மேலும் கூறிய அவர், ஆனால் முதல் முறையாக, ஒரு மிகப்பெரிய அறிவியல் சவாலை சமாளிக்க, ஹாக்கத்தான் மாதிரியை அவர்கள் பயன்படுத்துவதாக தெரிவித்தார். மிக முக்கியமாக, நமது முயற்சிகளை ஆதரிக்க சர்வதேசத் திறமைகளைக் கவர நாம் மும்முரமாக இருப்பதால், இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.

 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், "கணக்கீடு சார்ந்த மருந்துக் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை நமது நாட்டில் நாம் நிறுவ வேண்டும். இந்த முயற்சியில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கண்டுபிடிப்புகள் பிரிவும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமும் ஹாக்கத்தான் மூலமாக சாத்தியமுள்ள மருந்துக் கூறுகளை கண்டறிவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், கண்டறியப்பட்ட கூறுகளின் தொகுப்புக்காகவும் மற்றும் அவற்றின் செயல்திறன், விஷத்தன்மை, உணர்திறன், மற்றும் குறிப்பிட்ட தன்மைகள் ஆகியவற்றின் ஆய்வக சோதனைக்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம் இவற்றை முன்னெடுத்துச் செல்லும்," என்றார். மேலும் பேசிய அவர், "ஹாக்கத்தான் மூலமாக இன்- சிலிகோ மருந்து கண்டுபிடிப்பு முறையில் சார்ஸ்-கோவி-2வுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதும், மற்றும் வேதியியல் தொகுப்பு மற்றும் உயிரியல் சோதனை மூலமாக அதை முன்னெடுத்துச் செல்வதே இதன் நோக்கமாகும்," என்றார். மருந்து கண்டுபிடிப்பு என்பது சிக்கலான, செலவு அதிகமான மற்றும் கடினமான ஒரு செயல்முறை என்று குறிப்பிட்ட டாக்டர் ஹர்ஷ்வர்தன், ஒரு புது மருந்தைக் கண்டுபிடிக்க 10 வருடங்களுக்கும் மேல் ஆகும் என்றும், "கோவிட்-19- க்கான சில மறுநோக்கம் கொண்ட மருந்துகளின் மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் போது, அவை விரைவானதாகவும் சீக்கிரம் அறிமுகப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் போது, இதர பொருத்தமான மறுநோக்கம் உள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதும், கோவிட்-19க்கு எதிரான குறிப்பிட்ட மருந்துகளை உருவாக்குவதும் முக்கியமாகிறது," என்றார். "இயந்திரக் கல்வி, செயற்கை அறிவு மற்றும் பெரிய தகவல்கள் (Big Data) ஆகிய கணினி முறைகளைப் பயன்படுத்தும் இன்-சிலிக்கோ மருந்து கண்டுபிடிப்பு இந்த செயல்முறையைத் துரிதப்படுத்த உதவுகிறது," என்றார்.

 

மருந்து கண்டுபிடிப்பின் கணினி சார்ந்த விஷயங்களின் மீது அடிப்படையில் கவனம் செலுத்தும் இந்த ஹாக்கத்தான், மூன்று தளங்களைக் கொண்டது. மருந்து வடிவமைப்புக்கான கணினி மாதிரி அல்லது ஏற்கனவே இருக்கும் தகவல்களிலிருந்து சார்ஸ்-கோவி-2க்கான முன்னணிக் கூறுகளைத் தெரியப்படுத்துபவற்றைக் கண்டறிவதில் முதலாம் தடம் கையாளும். குறைந்தபட்ச நச்சுத் தன்மை மற்றும் அதிகபட்ச செயல் திறனுடன் கூடிய மருந்து போன்ற கூறுகளைக் கண்டறிவதற்கான செயற்கை அறிவு மற்றும் கணினி கற்றல் அணுகுமுறைக்காக தகவல் மதிப்பீடுகளை பயன்படுத்தி புதிய கருவிகளையும், வழிமுறைகளையும் கண்டுபிடிக்க பங்கேற்பாளர்களுக்கு இரண்டாவது தடம் ஊக்கமளிக்கும். டிராக் 3 எனப்படும் மூன்றாவது தடம், புதுமையான மற்றும் இதுவரை இந்தத் துறையில் சிந்திக்காத யோசனைகளை மட்டுமே கையாளும் அணுகுமுறையை கொண்டது.

 

*****



(Release ID: 1636079) Visitor Counter : 225