நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் ஏப்ரல்-நவம்பர் 2020-இல் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் (அரிசி-கோதுமை) தோராய மதிப்பு சுமார் ரூ 1,50,471 கோடி

Posted On: 01 JUL 2020 5:19PM by PIB Chennai

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத்திட்டம் நவம்பர் 2020 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இந்தத் திட்டம் ஜூலையில் இருந்து நவம்பர் 2020 இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த ஐந்து மாத காலத்துக்கு, 80 கோடி மக்களுக்கு மாதத்துக்கு 5 கிலோ இலவச அரிசி/கோதுமையுடன் ஒரு குடும்பத்துக்கு 1 கிலோ இலவச முழு பருப்பு (சென்னா) வழங்கப்படும்.

 

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு மாதத்துக்கு 5 கிலோ என்னும் விகிதத்தில், ஏப்ரல்-ஜூன் 2020 வரையிலான மூன்று மாதங்களுக்கு ரூ 44,131 கோடி தோராய மானியம் தேவைப்படும் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை மதிப்பிட்டுள்ளது. இது, ஒரு மெட்ரிக் டன் அரிசிக்கு ரூ 37,267.60 எனவும், ஒரு மெட்ரிக் டன் கோதுமைக்கு ரூ 26,838.40 எனவும் பொருளாதார விலையை எடுத்து செல்லும் (2020-21-க்கான நிதி நிலை அறிக்கையின் மதிப்பீட்டின் படி).

 

மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு பொருள்களை எடுத்து செல்ல மாநிலத்துக்குள் நடைபெறும் போக்குவரத்து மற்றும் கையாளும் செலவும், வணிகர்களின் லாபமும், பங்கு மாதிரியின் படியும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள செலவு விதிகளின் படியும் இந்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்தச் செலவையும் இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில், போக்குவரத்து, கையாளும் செலவுகளுக்கும், வணிகர்களுக்கு வழங்க வேண்டிய தொகைக்கும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக ஏற்கனவே உள்ள விதிகளின் படி ரூ 1,930 கோடி தேவைப்படுகிறது. மேற்கண்டவற்றின் காரணமாக, மாநிலத்துக்குள் நடைபெறும் போக்குவரத்து, மின்னணு விற்பனை முனையக் கருவியைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் வணிகர் லாபம் உள்ளிட்ட உணவு தானிய மானியம் மற்றும் செலவுக்கான இந்திய அரசின் மொத்த செலவு மதிப்பீடு ரூ 46,061 கோடி ஆகும்.   

 

மேற்கண்டவற்றின் அடிப்படையில், 32 மில்லியன் டன்கள் (ஏப்ரல்-ஜூன் 2020 வரை 12 மில்லியன் டன்கள் மற்றும் ஜூலை-நவம்பர் 2020 வரை 20 லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானியங்களை (அரிசி மற்றும் கோதுமை) ஏப்ரலில் இருந்து நவம்பர் 2020 வரை விநியோகிப்பதற்காக மதிப்பிடப்பட்டுள்ள செலவு தோராயமாக ரூ 1,22,829 கோடியாக இருக்கும்.

 

நுகர்வோர் விவகாரங்கள் துறையின் மதிப்பீட்டின் படி, ஏப்ரல்-ஜூன் 2020 வரையில் பருப்புகளை விநியோகிப்பதற்கான செலவு ரூ 5,000 கோடி ஆகும். இதன் படி, ஏப்ரல்-நவம்பர் 2020 வரை பருப்புகளை விநியோகிப்பதற்கான தோராய செலவு ரூ 13,333 கோடியாக இருக்கும். கூடுதலாக, இரண்டு மாதங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கான தோராயச் செலவு ரூ 3,109.52 கோடி ஆகும்.

 

உணவு தானியங்களுக்கு முன் கூட்டியே கணக்கிடப்படும் மத்திய வழங்கல் விலை ஒரு மாதத்துக்குத் தோராயமாக ரூ 1,400 கோடி என்னும் நிலையில், இதற்குத் தேவைப்படும் செலவு சுமார் ரூ 11,200 கோடி ஆகும். எனவே, உணவு தானியங்களின் (அரிசி-கோதுமை) விநியோகத்துக்கான தோராயச் செலவு சுமார் ரூ 1,50,471 கோடி ஆகும்.

 (Release ID: 1635824) Visitor Counter : 193