ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
கோவிட் – 19 நோய்த் தொற்றால் மிக சவாலான காலகட்டத்தை எதிர்கொள்ளும் நேரத்திலும் தேசிய இரசாயன உரங்கள் நிறுவனம் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது
Posted On:
01 JUL 2020 4:07PM by PIB Chennai
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களான தேசிய இரசாயன உரங்கள் நிறுவனம் (Rashtriya Chemicals and Fertilizers Limited RCF) இந்திய விவசாயத் துறையின் நல்வாழ்வுக்கு உறுதியளித்துள்ளது. கோவிட்-19 நோய் தொற்றால் மிகவும் சவாலான காலத்தை எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும், RCF அதன் சிறந்த பிராண்ட் உரங்களான ‘உஜ்ஜ்வாலா’ யூரியா மற்றும் ‘சுபாலா’ போன்றவை குறுவை சாகுபடி விதைப்புப் பருவத்தில் விவசாய சமூகத்திற்குக் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.
RCF நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன், அங்கு உரங்களும் போதுமான அளவு உற்பத்தி செய்யப்பட்டது. RCF நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உரங்களைத் தவிர, 2 லட்சத்துக்கும் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான வர்த்தகம் செய்யப்பட்ட கலப்பு உரங்களான DAP, APS (20: 20: 0: 13) & NPK (10:26:26). உரங்களையும் நாட்டில் தற்போதைய குறுவை விதைப்புப் பருவத்திற்காக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நல்வாய்ப்புள்ள இந்தியாவின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் RCF தனது தரவரிசையை மேம்படுத்தியுள்ளது, கடந்த 2018ஆம் ஆண்டில் 191வது இடத்தில் இருந்து 2019ஆம் ஆண்டில் 155வது இடத்திற்கு இது முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
(Release ID: 1635823)
Visitor Counter : 246