மத்திய பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020 மற்றும் இந்திய வனப்பணித் தேர்வுகள், 2020 தேர்வு மையங்கள் பற்றிய விருப்பத்தைத் தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தல்

Posted On: 01 JUL 2020 1:37PM by PIB Chennai

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020 (இந்திய வனப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020உட்பட),  05.06.2020 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்வுத் திட்டம்/ திருத்தப்பட்ட அட்டவணை-யின்படி, 04.10.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது

குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வுகள், 2020- (இந்திய வனப் பணி (முதல் நிலை) தேர்வுகள், 2020 உட்பட) எழுதுவோரின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும்தேர்வு மையங்களை மாற்ற விரும்புவதாக, விண்ணப்பதாரர்களிடமிருந்து வரப்பெற்ற வேண்டுகோளின் பேரிலும், தேர்வு மையம் தொடர்பாக, திருத்தப்பட்ட விருப்பத்தைத் தெரிவிக்க, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.   இந்த வாய்ப்பு தவிர, குடிமைப்பணி (முதன்மை) தேர்வுகள், 2020 மற்றும் இந்திய வனப் பணி (முதன்மை) தேர்வுகள், 2020-க்கான தேர்வு மையங்களை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதுதேர்வு மையங்கள் மாற்றம் தொடர்பான விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள், அந்த மையங்களின் கூடுதல்/மேம்படுத்தப்பட்ட திறன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, கூடுதல் விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பற்றி தெரிவிக்கப்படும்

விண்ணப்பதாரர்கள் தங்களது திருத்தப்பட்ட விருப்பத்தைப் பதிவு செய்வதற்காக தேர்வாணையத்தின் இணையதளமான https://upsconline.nic.in.,   இரண்டு கட்டங்களாகஅதாவது, 7 – 13 ஜுலை,2020 (பிற்பகல் 06.00மணி) மற்றும் 20 – 24 ஜுலை, 2020 (பிற்பகல் 06.00 மணி வரை) செயல்பாட்டில் இருககும்எனவே, தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள்தேர்வுமையம் பற்றிய தங்களது விருப்பத்தை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

தேர்வு மைய மாற்றம் குறித்த விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள்,  “முதலில் விண்ணப்பிப்போருக்கு முதலில் ஒதுக்கீடுஎன்ற அடிப்படையில்  பரிசீலிக்கப்படும்,    (தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதோடு, குடிமைப்பணித் தேர்வுகள் (முதல்நிலை)2020 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வுகள்(முதல்நிலை) 2020 பற்றிய தேர்வு அறிவிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது)   மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தின் முழு கொள்ளளவை எட்டிவிட்டால், அந்த மையத்திற்கு மாற்றுவதற்கான வாய்ப்பு நிறுத்தப்படும்தங்களது விருப்பப்படி தேர்வு மையம் ஒதுக்கீடு பெற முடியாத விண்ணப்பதாரர்கள், எஞ்சிய தேர்வு மையங்களில் எதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்

குடிமைப் பணித் தேர்வு(முதல்நிலை)-க்கான தேர்வு அறிவிக்கை எண்.05/2020-சி.எஸ்.பி.   நாள்:12/02/ மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு, 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண்.06/2020-... நாள்: 12/02/20202020 -இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகள் மற்றும் தகுதிகளில் எந்த மாற்றமும் இல்லை

இது தவிரவிண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தைத்  திரும்பப் பெற்றுக் கொள்ளவும், தேர்வாணைய இணையதளமான  website https://upsconline.nic.in 1 – 8 ஆகஸ்ட், 2020  வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யலாம்.   குடிமைப் பணித் தேர்வு (முதல்நிலை) 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண்.05/2020-சி.எஸ்.பி. நாள்: 12/02/2020 மற்றும் இந்திய வனப் பணித் தேர்வு 2020-க்கான தேர்வு அறிவிக்கை எண். 06/2020-... நாள்:12/02/2020ல் குறிப்பிடப்பட்டுள்ள திரும்பப்பெறுதலுக்கான அனைத்து நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை.   விண்ணப்பதாரர்கள் ஒருமுறை தங்களது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால், எதிர்காலத்தில், எத்தகைய சூழ்நிலையிலும்  அதனை புதுப்பிக்க முடியாது.      



(Release ID: 1635650) Visitor Counter : 242