அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 குறித்த ஆய்வகம்: தாவரவியல் ஆய்வு நிறுவனம் அமைத்தது

Posted On: 30 JUN 2020 12:28PM by PIB Chennai

லக்னோவில் உள்ள தேசிய தாவரவியல் ஆய்வு நிறுவனம் (National Botanical Research Institute - NBRI) “கோவிட் – 19” தொற்று குறித்து ஆராய்வதற்கான ஓர் ஆய்வகத்தை அமைத்துள்ளது. இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ICMR), உலக சுகாதார நிறுவனம் (WHO), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் உயிரிப் பாதுகாப்பு நிலை – 3 (Bio Safety Level-3) என்ற வசதி உள்ளது. “உயிரிப் பாதுகாப்பு நிலை (Bio Safety Level) என்பது ஒரு தொற்றுக்கான நோய்க்கிருமியைக் கையாள்வதன் அடிப்படையில் வகுக்கப்படுகின்றது. இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி உயிரிப் பாதுகாப்பு நிலை – 2 கோவிட்- 19 தொற்றினை ஆய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மேம்பட்ட ஆய்வாகும்என்று தேசிய தாவரவில் ஆய்வு நிறுவனத்தின் முதுநிலை முதன்மை விஞ்ஞானி டாக்டர் சமீர் சாவந்த் தெரிவித்தார்.

இந்த மேம்பட்ட ஆய்வகத்தில் தூசுப் படலத்தை உறிஞ்சும் வசதி உள்ளது. உறிஞ்சிய தூசுப் படலம் வடிப்பான்களில் வடிக்கப்படும். எனவே, அது கிருமிகள் அல்லது பாக்டீரியா ஆகியவற்றை வடிகட்டி பாதுகாக்கப்பட்டகோவிட்-19” கிருமியாக மாற்றிவிடும். ஆய்வுக்காக இந்தக் கிருமியை வளர்க்கும்போது தொற்றுத் தாக்கம் ஏற்படாமலும் பாதுகாக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளதுஎன்றும் அவர் கூறினார்.

*****


(Release ID: 1635357) Visitor Counter : 228