எஃகுத்துறை அமைச்சகம்

திரு தர்மேந்திர பிரதான் பஞ்சாபில் மாண்டி கோவிந்த்கரில் தொடச்சியான எஃகு கட்டிகள் உற்பத்தி வசதியைத் தொடங்கி வைத்தார்

Posted On: 29 JUN 2020 1:57PM by PIB Chennai

மத்திய எஃகு மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று பஞ்சாபில் மாண்டி கோவிந்த்கரில் மாதவ் உலோக நிறுவனம் அமைத்துள்ள "தொடர்ச்சியான கலாய் பூசப்பட்ட எஃகுக் கட்டிகள் உற்பத்திப் பிரிவைத் " தொடங்கி வைத்தார்.
     நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு பிரதான் , "பொதுவாக எஃகும் குறிப்பாக கலாய் பூசப்பட்ட எஃகும் சுற்றுச் சூழலுக்கு உகந்த, கொடுத்த விலைக்கு ஏற்ற உறுதியான உலோகங்கள். கட்டுமானத்துறையின் பெரிய அளவிலான விரிவாக்கம் முக்கிய கவனம் பெற்றுவரும் நிலையிலும், எஃகின் தீவிரப் பயன்பாடு வளர்ந்து வரும் நிலையிலும், கலாய் பூசப்பட்ட எஃகுக்கான தேவை அதிகரிக்க உள்ளது: இன்று தொடங்கி வைக்கப்பட்ட, தொடர்ச்சியான கலாய் பூசப்பட்ட எஃகுக்
கட்டிகள் உற்பத்திப் பிரிவு கட்டுமானத் தொழில் துறையில் ஆவலுடன்
எதிர்பார்க்கப்பட்ட கலாய் பூசப்பட்ட எஃகுத் தேவையை எதிர்கொள்ள உதவும்" என்று கூறினார். எஃகுத்துறையில் சுயசார்பு பற்றிக் குறிப்பிட்ட திரு பிரதான், " சுயசார்பு கொண்ட இந்தியா, வலுவான உற்பத்தி பிரிவுகள், தற்சார்புடன் கூடிய அதேசமயம் உலகத்துடன் ஒருங்கிணைந்த பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட வலுவான
இந்தியா. எஃகுத் துறை முக்கிய பங்காற்றக் கூடியது. இத்துறையில் நமது உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்வதுடன் உலகின் தேவையையும் நிறைவு செய்ய உதவ வேண்டும்: இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலை சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதில் எடுத்து வைக்கப்பட்டுள்ள சரியான முன்னெடுப்பு" என்று கூறினார். எஃகுத் துறையை மேலும் துடிப்புள்ளதாகவும் சுய சார்பு கொண்டதாகவும் செய்வதற்கு எஃகு அமைச்சகம் மேற்கொண்டுள்ள, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் கொள்கை, எஃகு தொழில் தொகுப்புகள் உருவாக்கம், எஃகுக் கழிவுகள் கொள்கை, மூலப்பொருள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள், முறையான எஃகுப் பயன்பாட்டை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் திரு பிரதான் குறிப்பிட்டார்.

*******(Release ID: 1635122) Visitor Counter : 177