பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

அரசு மின் சந்தையில் Government e-Marketplace (GeM) ‘‘பழங்குடியின இந்தியா’ பொருள்கள்; புனரமைக்கப்பட்ட TRIFED இணையதளம் ஆகியவற்றை திரு.அர்ஜுன் முண்டா, துவக்கி வைத்தார்.

Posted On: 28 JUN 2020 2:05PM by PIB Chennai

உலக அளவிலான கோவிட்-19 பெருந்தொற்று நம் நாட்டில் எதிர்பாராத நிலைமைகளை ஏற்படுத்தி, நம் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ளது. ஏழை மக்கள், மிகவும் பின்தங்கிய மக்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தையும் மோசமாகப் பாதித்துள்ளது. இந்தக் கடினமான காலகட்டத்தில் பழங்குடிமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சிக்கலான காலங்களில், பழங்குடியினக் கைவினைஞர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய பழங்குடியின விவகார அமைச்சகத்தின், ந்தியப் பழங்குடியினக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (Tribal Cooperative Marketing Development Federation of India - TRIFED) பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக பொருளாதாரச் செயல்பாடுகளை மீண்டும் புதுப்பிக்கும் வகையிலான, உடனடி முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது. காணொளி மாநாட்டின் மூலமாக TRIFED டிஜிட்டல் தளங்களைத் துவக்கி வைத்து உரையாற்றிய, மத்திய பழங்குடியின விவகார அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, வனங்களின் விளைபொருள்கள், கைத்தறிப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியின வர்த்தகத்தை TRIFED போராளிகள் குழு முன்னெடுத்துச் செல்லும் என்றும், இதனால் பழங்குடியின மக்கள் வாழ்க்கையிலும், வாழ்வாதாரத்திலும் உயரிய முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறினார். பெரும்பாலான மக்கள், - வர்த்தக செயல்பாடுகள், பொருள்கள் வாங்குதல், தகவல் தொடர்பு என்று பல்வேறு வகையான தேவைகளை ஆன்லைன் மூலமாகவே பூர்த்தி செய்து வருகின்ற இந்த நிலையில், கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட பழங்குடியினப் பொருள்ளின் உற்பத்தியாளர்கள், தேசிய, சர்வதேச சந்தைகளுடன் இணையும் வகையில், அனைத்தையும் உள்ளடக்கிய சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையிலான உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட மின் தளம் ஒன்றை உருவாக்குவது சிறந்த உத்தி ஆகும் என்று அவர் கூறினார்.

TRIFED டிஜிட்டல் மயமாகிறது என்ற தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக இது அமைந்தது. உள்ளூர் என்று உரக்கக் கூறுங்கள்’ ‘பழங்குடியினரை சென்றடைவோம் #GoTribal - TRIFED ஏற்பாடு செய்திருந்த இந்த இணைய வழி கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அரசு மின் சந்தையில் Government e-Marketplace (GeM)  பழங்குடியின இந்தியா பொருள்களைத் துவக்கி வைத்தது;  TRIFED ன் புதிய இணைய தளத்தைத் (https://trifed.tribal.gov.inதுவக்கி வைத்ததும் சிறப்பம்சமாக இருந்தது.  இந்தச் சந்தையில் பழங்குடியின இந்தியாவின் பல்வேறு வகையான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.த்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, TRIFED சேர்மன் திரு ரமேஷ் சந்த் மீனா, TRIFED வாரிய உறுப்பினர் திருமதி பிரதீபா பிரம்மா, துணைச் செயலரும் TRIFED தலைமை நிதி அதிகாரியுமான திரு ராஜீவ் கண்ட்பால், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணைத்தலைமை இயக்குநர் திருமதி. நானு பஸின் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைத்து துறைகளின் தலைவர்களும், மூத்த அதிகாரிகளும் TRIFED குழுவில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு அர்ஜுன் முண்டா, முதலில் அரசு மின் சந்தையில் பழங்குடியின இந்தியா கடையைத் திறந்து வைத்தார். அரசு வாங்க நினைக்கும் பொருள்களை இத்தளத்தின் மூலமாகவே வாங்கிக் கொள்ளவும் இத்தளம் உதவும். புனரமைக்கப்பட்ட TRIFED இணையதளம் (https://trifed.tribal.gov.in/), பழங்குடியின சமுதாயத்தினருக்கு நன்மை அளிக்கும் விதத்திலான பல்வேறு முயற்சிகள், திட்டங்கள் பற்றிய அனைத்து தேவையான விவரங்களையும் கொண்டுள்ளது.

தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள எதிர்பாராத நிலைமை குறித்து பேசிய திரு.முண்டா, புலம்பெயர் தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். பழங்குடியினர் கைவினைஞர்கள், பழங்குடியின ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியவர்களின் பொருளாதார நிலையைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக அமைச்சக அதிகாரிகளுக்கும், TRIFED போராளிகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். பழங்குடியின சமுதாயத்தினருக்கு அதிகாரம் வழங்குவது; அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்திக்கொள்வது; இதுவரை தொடர்பற்று இருந்த அவர்களை தொடர்பில் கொண்டு வருவது ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்த எதிர்பாராத நிலைமையில் நம்முன் உள்ள வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .

பழங்குடியின இந்தியா மின்சந்தை ரீடைல் இன்வெண்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனப்படும் பொருள்கள் மேலாண்மை முறையில் சரக்குகளைக் கொள்முதல் செய்வதில் இருந்து விற்பனை செய்வது வரை, அனைத்தும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து லட்சம் பழங்குடியினக் கைவினைஞர்கள் இந்தத் தளத்தின் மூலம் தேசிய, சர்வதேச சந்தைகளை அணுக முடியும். இது ஜூலை 2020 இறுதியில் தொடங்கப்பட உள்ளது. A screenshot of a cell phoneDescription automatically generatedA screenshot of a computerDescription automatically generated

TRIFEDன் ன்தன் ஒருங்கிணைந்த தகவல் கட்டமைப்பு மூலமாக வனங்களில் வசிப்பவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடுகள் நடக்கின்றன. வன்தன் யோஜனா திட்டம் கிராமச் சந்தைகளையும், கிடங்குகளையும் இணைக்கின்றன.. தேசிய அளவிலான திட்டங்களைக் கண்காணிக்கவும், திட்டங்களை சுமுகமாக செயல்படுத்தவும், அதற்கான முடிவுகளை மேற்கொள்ளவும் இது உதவுகிறது இத்திட்டம் 22 மாநிலங்களில் மூன்று லட்சத்து 61 ஆயிரத்து 500 பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியினத் தொகுப்புகளில் அடையாளம் காணப்பட்டு, நாடுமுழுவதும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பழங்குடியின மக்களும், ஆத்ம நிர்பார் அபியான் திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுடன் இணைந்து பணியாற்றி, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு அனைத்துப் பயன்களும் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். ஆத்ம நிர்பார் அபியான் திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு ஏற்ற வகையில் TRIFED இயங்கி வருகிறது

 

*****



(Release ID: 1635004) Visitor Counter : 185