சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 கூடுதல் விவரங்கள்

கோவிட்-19 தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, தொற்றால் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை விஞ்சும் தொற்றில் இருந்து மீண்டவர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கபட்டுள்ளவர்கள் இடையே உள்ள வேறுபாடு 1 லட்சத்தை நெருங்குகிறது

Posted On: 27 JUN 2020 5:50PM by PIB Chennai

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு முன்கூட்டியே மேற்கொண்ட கூட்டான, தரப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் விளைவாக, மீட்கப்பட்ட மொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கொவிட்-19 தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இடையிலான வேறுபாடு 1 லட்சத்தை நெருங்குகிறது. இன்றைய நிலவரப்படி பெரும் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை தொற்றில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது 98,493 ஆக அதிகரித்துள்ளன.

தொற்றில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,97,387 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,880 ஆகவும் உள்ளது. இந்த ஊக்கமளிக்கும் நிலையில், கொவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 58.13 சதவீதத்தைத் தொடுகிறது.

கோவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் 15 மாநிலங்கள்:

 

வரிசை எண்

மாநிலம் / யூனியன் பிரதேசம்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை

1.

மகாராஷ்டிரா

73,214

2.

குஜராத்

21,476

3.

டெல்லி

18,574

4.

உத்திரப்பிரதேசம்

13,119

5.

ராஜஸ்தான்

12,788

6.

மேற்கு வங்காளம்

10,126

7.

மத்தியப்பிரதேசம்

9,619

8.

ஹரியானா

7,360

9.

தமிழ்நாடு

6,908

10.

பிகார்

6,546

11.

கர்நாடகா

6,160

12.

ஆந்திரப்பிரதேசம்

4,787

13.

ஒடிசா

4,298

14.

ஜம்மு காஷ்மிர்

3,967

15.

பஞ்சாப்

3,164

 

குணமடைந்தவர்கள் சதவீதத்தின் அடிப்படையில் முதல் 15 மாநிலங்கள்:

 

வரிசை எண்

மாநிலம் / யூனியன் பிரதேசம்

குணமடைந்தோர் சதவீதம்

1

மேகாலயா

89.1%

2

ராஜஸ்தான்

78.8%

3

திரிபுரா

78.6%

4

சண்டிகர்

77.8%

5

மத்தியப்பிரதேசம்

76.4%

6

பிகார்

75.6%

7

அந்தமான் நிகோபார் தீவுகள்

72.9%

8

குஜராத்

72.8%

9

ஜார்கண்ட்

70.9%

10

சத்தீஸ்கர்

70.5%

11

ஒடிசா

69.5%

12

உத்திரகாண்ட்

65.9%

13

பஞ்சாப்

65.7%

14

உத்திரப்பிரதேசம்

65.0%

15

மேற்கு வங்காளம்

65.0%

 

பரிசோதனை வசதிகளை மேம்படுத்துவதற்கான சான்றாக, இந்தியாவில் இப்போது கோவிட்-19 கண்டறிய 1026 ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசுத் துறையில் 741 மற்றும் 285 தனியார் ஆய்வகங்கள் உள்ளன.

அதன் விவரங்கள் கீழே உள்ள:

  • நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 565 (அரசு: 360 + தனியார்: 205)
  • ட்ரூநாட் (TrueNat) அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 374 (அரசு: 349 + தனியார்: 25)
  • CBNAAT அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 87 (அரசு: 32 + தனியார்: 55)

கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் மேலும் 2,20,479 ஆக அதிகரித்துள்ளன. சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதியின்படி, 79,96,707 ஆகும்.

கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கும் தயவுசெய்து தவறாமல் பார்வையிடவும்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப வினவல்கள் technicalquery.covid19[at]gov[dot]in  மற்றும் பிற கேள்விகளுக்கு ncov2019[at]gov[dot]in மற்றும் @CovidIndiaSeva இல் அனுப்பப்படலாம்.

கோவிட்-19 இல் ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உதவி எண்: + 91-11-23978046 அல்லது 1075 (கட்டணமில்லா) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கோவிட்-19 இல் உள்ள மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் உதவி எண்களின் பட்டியலும் பின் வரும் இணைய தளத்தில் கிடைக்கிறது. https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

****************



(Release ID: 1634822) Visitor Counter : 216