கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பெருந்தொற்று காலத்தின் போதும், பொருளாதார சக்கரத்தை நகர்த்திச் செல்லும், கப்பல் பணியாளர்களுக்கு திரு மாண்டவியா பாராட்டு
சர்வதேச கப்பல் பணியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
25 JUN 2020 5:26PM by PIB Chennai
சர்வதேசக் கப்பல் பணியாளர்கள் தினத்தையொட்டி ‘தேசிய கடல்சார் நாள் விழா கொண்டாட்டங்கள் குழு’ ஏற்பாடு செய்திருந்த விழாவில் முக்கிய விருந்தினராக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை (தனிப்பொறுப்பு) இணை அமைச்சர் திரு மான்சுக் மாண்டவியா காணொளி மாநாடு மூலம் கலந்து கொண்டார். கப்பல் பணியாளர்களுக்கான ஆண்டு தினம், இந்த ஆண்டு “கப்பல் பணியாளர்கள் முக்கியப் பணியாளர்கள்” என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது உலக வர்த்தகத்தில் 90 சதவிகிதம் கடல்வழியாக நடைபெறுகிறது. எனவே உலகின் பொருள் வழங்கு தொடரைப் பராமரிப்பதில் கப்பல் பணியாளர்கள் ஆற்றிவரும் பங்கைப் பாராட்டுவதாக இது அமைகிறது.
திரு.மாண்டவியா மின் இதழ் ஒன்றை வெளியிட்டு, உரையாற்றினார் கப்பல்துறை தலைமை இயக்குநர் அலுவலக அதிகாரிகள், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைவர் நிர்வாக இயக்குநர், நிறுவன ஊழியர்கள், கப்பல் பணியாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சர்வதேசக் கப்பல் பணியாளர்கள் தினத்தையொட்டி கப்பல் பணியாளர்கள் அனைவருக்கும் திரு. மாண்டவியா பாராட்டு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியக் கப்பல் பணியாளர்கள் ஆற்றிவரும் பங்கிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இப்பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவாக உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு திரு.மாண்டவியா நன்றி தெரிவித்தார். பயணம் தொடங்கும் முன்னரும், பயணம் முடிந்த பிறகும் பல்வேறு நடைமுறைகளை கோவிட் பொது முடக்கக் காலத்தில் பின்பற்றுவதில் உள்ள தொழில்ரீதியான சிக்கல்களையும் சவால்களையும் கப்பல் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 2014ஆம் ஆண்டு 94 ஆயிரமாக இருந்த இந்திய கப்பல் பணியாளர்களின் பங்கு 5 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திரு.மாண்டவியா கூறினார் இதனால் இந்திய இளைஞர்களுக்கு அதிக வருவாய் அளிக்கக்கூடிய, அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். கோவிட் பெருந்தொற்று காலத்தின் போதும், பொருளாதார சக்கரத்தை நகர்த்திச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், வருங்காலத்தில், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கும், சேவை செய்வதற்கும் பாதுகாப்பான முறையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
------
(Release ID: 1634411)