பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

மியான்மரில் பிளாக் ஏ-1 மற்றும் ஏ-3 மேம்பாட்டுக்கு, ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் கூடுதல் முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

Posted On: 24 JUN 2020 4:42PM by PIB Chennai

மியான்மரில் ஷ்வே எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின் பிரிவுகள் -1 மற்றும் -3 ஆகியவற்றின் கூடுதல் மேம்பாட்டுக்கு, ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனத்தின் கூடுதல் முதலீடாக 121.27 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ. 909 கோடி) பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

தென் கொரியா, இந்தியா மற்றும் மியான்மரை சேர்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக, மியான்மரில் உள்ள ஷ்வே திட்டத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் 2002 முதல் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கெயிலும் இத்திட்டத்தின் மற்றுமொரு முதலீட்டாளர் ஆகும். 722 மில்லியன் அமெரிக்க டாலர்களை 31 மார்ச், 2019 வரை இந்தத் திட்டத்தில் ஓஎன்ஜிசி விதேஷ் நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

 

ஷ்வே திட்டத்தின் முதல் எரிவாயு ஜூலை 2013-இல் கிடைக்கப்பெற்று, பீடபூமி உற்பத்தி டிசம்பர் 2014-இல் எட்டப்பட்டது. நிதி ஆண்டு 2014-15-இல் இருந்து நேர்மறை நிதி ஓட்டங்களை இந்தத் திட்டம் உருவாக்கி வருகிறது.

 

 

***

 



(Release ID: 1633982) Visitor Counter : 144