உள்துறை அமைச்சகம்
பூரி ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டியுள்ளார்
Posted On:
22 JUN 2020 7:30PM by PIB Chennai
பூரி ரத யாத்திரை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டியுள்ளார். "இன்று நம் அனைவருக்கும் ஒரு சிறப்பு நாள், குறிப்பாக எங்கள் ஒடியா சகோதர சகோதரிகள் மற்றும் மகாபிரபு திரு ஜகந்நாத் ஜியின் பக்தர்கள். ரத யாத்திரை தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்கான மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியடைகிறது,” என்று அவர் தொடர்ச்சியான ட்வீட்டுகள் மூலம் கூறினார்.
திரு. அமித் ஷா கூறுகையில், “பிரதமர் திரு. நரேந்திர மோடி பக்தர்களின் உணர்வைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நம் நிலத்தின் சிறந்த மரபுகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் ஆலோசனைகளை ஆரம்பித்ததில் எனக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கோடி கணக்கான பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.”
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக திரு அமித் ஷா கூறினார். “நேற்று மாலை, பிரதமரின் அறிவுறுத்தலின் படி, நான் கஜபதி மகாராஜ் ஜி (பூரி மன்னர்) மற்றும் பூரியின் மரியாதைக்குரிய சங்கராச்சாரியார் ஜி ஆகியோருடன் பேசினேன், யாத்திரை குறித்த அவர்களின் கருத்துக்களை நாடினேன். இன்று காலை, பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், நான் தலைமை வழக்கறிஞருடன் பேசினேன்,” என்று அவர் கூறினார்.
"இந்த விஷயத்தின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அது உச்சநீதிமன்றத்தின் விடுமுறை அமர்வின் முன் வைக்கப்பட்டு, இன்று பிற்பகல் விசாரணை நடந்தது, இது உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான முடிவுக்கு வழி வகுத்தது" என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.
“ஒடிசா மக்களுக்கு வாழ்த்துக்கள். ஜெய் ஜெகந்நாத்!(जय जगन्नाथ!)” என்றார் திரு அமித் ஷா.
******************
(Release ID: 1633618)
Visitor Counter : 232