உள்துறை அமைச்சகம்

2020 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


யோகா என்பது உடலை கட்டுகோப்பாக வைப்பதற்கான ஒரு வழி மட்டுமல்ல, உடலுக்கும், மனதுக்கும், வேலைக்கும், சிந்தனைக்கும் மற்றும் இயற்கையுக்கும், மனிதனுக்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்கும் ஒரு பாலமாகவும் அது செயல்படுகிறது – அமித்ஷா.

பிரதமர் நரேந்திர மோடி - அமித் ஷாவின் அயராத முயற்சியால் யோகா உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

Posted On: 21 JUN 2020 10:58AM by PIB Chennai

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திரு.  அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில், ‘யோகா என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரு வழியாகும். மேலும் உடலுக்கும், மனதுக்கும், வேலைக்கும், சிந்தனைக்கும் மற்றும் இயற்கையுக்கும், மனிதனுக்கும் இடையில் சமநிலையைப் பராமரிப்பதில் ஒரு பாலம் போல அது செயல்படுகிறது என தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், ‘யோகா என்பது மனித குலம் முழுமைக்குமான இந்தியாவின் தனித்துவமான பரிசாகும். உலகம் இப்போது யோகாவை ஏற்றுக்கொண்டது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அயராத முயற்சியால் அது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது என்று தெரிவித்தார்.  ’

தனது வாழ்த்துரையின் முடிவில் திரு. அமித்ஷா, இந்த சந்தர்ப்பத்தில் யோகாவை தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

 

********


(Release ID: 1633116) Visitor Counter : 242