பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாம் உலகப் போரின் 75வது வெற்றி நாள் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
Posted On:
20 JUN 2020 2:33PM by PIB Chennai
இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார். ரஷ்யா மற்றும் பல நேசக்கரங்கள் செய்த வீரச் செயல்களையும், அவர்களது தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில் அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் திரு செர்ஜி ஷோயுக், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை வெற்றி அணிவகுப்புக்கு அழைத்துள்ளார். இது முதலில் மே 9, 2020 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தனித்தனியாக, ஒரு முத்தரப்பு சேவை 75-உறுப்பினர் கொண்ட இந்திய இராணுவக் குழு ரஷ்ய இராணுவக்குழு மற்றும் அழைக்கப்பட்ட பிற குழுக்களுடன் வெற்றி அணிவகுப்பில் பங்கேற்க ஏற்கனவே மாஸ்கோ சென்றடைந்துள்ளது. வெற்றி நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் இந்த இராணுவக்குழு, மகத்தான சீக்கிய லைட் காலாட் படைப்பிரிவின் முக்கிய தரவரிசை அதிகாரி தலைமையிலானது. இரண்டாம் உலகப்போரில் இந்த படைக்குழு வீரத்துடன் போராடியதுடன், நான்கு போர் கௌரவ விருதுகள் மற்றும் இரண்டு மிலிட்டரி கிராஸ் ஆகியவற்றைப் பெற்ற பெருமைக்குரிய மதிப்பைக் கொண்டுள்ளது.
வெற்றி நாள் அணிவகுப்பில் இந்தியப் பங்கேற்பு, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா மற்றும் பிற நாடுகள் மட்டுமல்லாது, இந்திய வீரர்களும் பங்கேற்று செய்த மகத்தான தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் அடையாளமாக இருக்கும். வெற்றி தினத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு அனுப்பிய சிறப்புச் செய்திகளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ரஷ்யக் கூட்டமைப்பின் தலைவர் திரு.விளாடிமிர் புடினை வாழ்த்தியதையும், பாதுகாப்பு அமைச்சர் தனது பங்கிற்கு வாழ்த்தியதையும் நினைவு கூறலாம். பாதுகாப்பு அமைச்சரின் வருகை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால சிறப்பான ஒருங்கிணைந்த கூட்டணியைப் பலப்படுத்தும்.
*********************
(Release ID: 1632929)
Visitor Counter : 249