ஜல்சக்தி அமைச்சகம்

ஒடிசாவில் ஜல் ஜீவன் மிஷனின் கீழ் மந்த கதியில் வேலைகள் நடைபெறுவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முதல்வருக்கு கடிதம்.

Posted On: 19 JUN 2020 4:12PM by PIB Chennai

ஒடிசா முதல்வருக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷேகாவத் ஒரு கடிதமெழுதி ஜல் ஜீவன் மிஷனின் (ஜே.ஜே.எம் – JJM) முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன், இந்தத் திட்ட்த்தை விரைவாக செயல்படுத்தவும் வலியுறுத்தினார். 2024க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஜே.ஜே.எம்- திட்த்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவரது கடிதம் எதிரொலித்தது.

மத்திய அமைச்சர் தனது கடிதத்தில் இலக்கு குறைபாடுகள் மற்றும் மாநிலத்தின் நிதி போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை என்பதை எடுத்துரைத்தார். 2019-20ஆம் ஆண்டில், 15.61 லட்சம் என்ற இலக்கை எட்டாமல், மாநிலத்தில் 4.37 லட்சம் (27.97%) குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தப் பின்னடைவு, நிதியை குறைந்த அளவில் பயன்படுத்தழி வகுத்தது. ஒடிசாவுக்கு 2019-20ல் 364.74 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதில் மாநிலத்திற்கு 275.02 கோடியை மட்டுமே பயன்படுத்த முடியும். மாநிலத்தால் நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்பதால், உடன் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், நிதிப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நீர் வழங்கல் திட்டங்களுக்கான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் மூலதனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த பணிக்காக, வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புக் குழாய் செயல் திட்ட (எஃப்.எச்.டி.சி) வெளியீடு மூலம்  கிடைக்கக் கூடிய மத்திய மற்றும் பொருந்தக் கூடிய மாநிலப் பங்கின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.

*******


(Release ID: 1632665) Visitor Counter : 149