உள்துறை அமைச்சகம்

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் குறித்த சுகாதாரக் கணக்கெடுப்புகளில், கோவிட்-19 கையாள்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவின் அறிவுறுத்தல்கள் டெல்லியில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

Posted On: 19 JUN 2020 3:17PM by PIB Chennai

டெல்லி மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் மோடி அரசின் கடைமையை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, டெல்லியில் கோவிட்-19 நிலைமை குறித்து தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். டெல்லியில் கோவிட்-19 நிலைமை குறித்து கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக தனது தலைமையில் நடைபெற்ற கூட்டங்களின் போது மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த அறிவுறுத்தல்களின்படி, டெல்லியில் 242 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக சுகாதார கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிக்கப்பட்டது. மொத்தம் 2.3 லட்சம் பேர் இதில் ஆய்வு செய்யப்பட்டனர்.

            மேலும், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவப் பரிசோதனை செய்யும் திறனை மேம்படுத்தவும், பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்கவும், டெல்லியில் தீவிர ஆன்டிஜென் பரிசோதனை நடைமுறையின் படி மருத்துவப் பரிசோதனை நேற்று தொடங்கப்பட்டது. 193 மருத்துவப் பரிசோதனை மையங்களில் மொத்தம் 7.040 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வரக் கூடிய நாட்களில் இன்னும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.

            திரு அமித் ஷா மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. 2020 ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரையில் 27,263 பரிசோதனை சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முன்பு இது 4,000-4,500 என்ற நிலையில் இருந்து வந்தது.

            டெல்லியில் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல் தலைமையில் ஒரு கமிட்டியை உருவாக்கினார். டெல்லியில் கோவிட்-19 நோயாளிகளுக்கு 60 சதவீத படுக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிப்பதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணங்களை இந்தக் குழு நிர்ணயித்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு டெல்லி தனியார் மருத்துவமனைகளில் வசூலிப்பதற்கான புதிய கட்டண விகிதம்

 

 

பிரிவு

(தனியார் மருத்துவமனைகள்)

புதிய கட்டணங்கள் (ஒரு நாளுக்கு)

(PPE மற்றும் மருந்துகள் உள்பட)

 

பழைய கட்டணங்கள் (ஒரு நாளுக்கு)

(PPE இல்லாமல்)

 

தனிமைப்படுத்தல் படுக்கைகள்

 

ரூ.  8000 – 10000

 

ரூ.  24000 - 25000

 

வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள்

 

ரூ.  13000 – 15000

 

ரூ.  34000 - 43000

வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்

 

ரூ.  15000 – 18000

 

ரூ.  44000 - 54000

 

இந்தக் கமிட்டி ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ. 8,000 - ரூ.10,000 வரையிலும், ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ.13,000 - 15,000 வரையிலும், ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ.15,000 - 18,000 வரையிலும் என்று முறையே தனிமைப்படுத்தல் படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குக் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும் (அந்த மருத்துவமனை NABH சான்றளிப்பு பெற்றதா என்பதைப் பொருத்து இது அமையும்). இப்போதுள்ள ஒரு நாளுக்கு ரூ. 24,000 - 25,000 (PPE அல்லாமல்), ரூ. 34,000 - 43,000 (PPE அல்லாமல்),  ரூ.44,000 - 54,000 (PPE அல்லாமல்) என்பதில் இருந்து இது குறைக்கப் பட்டுள்ளது.



(Release ID: 1632631) Visitor Counter : 171