பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

சிறு வனப் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை பழங்குடியினப் பொருளாதாரத்தில் ரூ.2000 கோடியைச் சேர்த்துள்ளது

Posted On: 18 JUN 2020 7:42PM by PIB Chennai

மத்திய அரசு மற்றும் மாநில நிதியங்கள் மூலம் சிறு வனப் பொருட்கள்
கொள்முதல் 17 மாநிலங்களில் தொடங்கப்பட்டதன் காரணமாக மொத்தம் ரூ .835 கோடி அளவிலும், மண்டிகள் \ கண்காட்சி சந்தைகள் மூலமான தனியார் வர்த்தகம் காரணமாக ரூ. 1200 கோடி அளவிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மொத்தக் கொள்முதல் ரூ. 2000 கோடி அளவைத் தொட்டுள்ளது. இந்தத் தொகை பழங்குடியினரின் வங்கிக் கணக்குகளில் அவர்களது சிறு வன பொருட்களுக்குப் பதிலாக நேரடியாக செலுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
புதுதில்லியில் இன்று (19.6.2020) ட்ரைஃபெட் ஏற்பாடு செய்திருந்த வலைதளக்
கருத்தரங்கில் இது தெரிவிக்கப்பட்டது. " சிறு வனப் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைத் திட்டம் பழங்குடியின இந்தியாவில் வேர்விட்டுள்ளது" என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கிற்கு ட்ரைபெட் அமைப்பின் மேலாண்மை இயக்குனர் திரு ப்ரவீர் கிருஷ்ணா தலைமை ஏற்றார். மத்திய பழங்குடியின அமைச்சகத்தின் வன தானத் திட்டம் என்ற தொடக்க நிலை தொழில் திட்டம், அது தொடங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் வெற்றி அடைந்துள்ளது. இத்திட்டத்தினால் 22 மாநிலங்களில் 1205 பழங்குடியினத் தொழில்கள் மூலம், 3.6 லட்சம் பழங்குடியின சேகரிப்போரும் 18000 சுய உதவிக் குழுவினரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம். அது நாடெங்கும் சிறு வனப் பொருட்களுக்குக் குறைந்த பட்ச ஆதரவு விலைத் திட்டம் வேரூன்ற வினை ஊக்கியாக விளங்கியுள்ளது.

கருத்தரங்கில் விளக்கமளித்த திரு ப்ரவீர் கிருஷ்ணா, தொடக்கத்தில்
இத்திட்டம் 2 மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டதாகவும் பின்னர் 17
மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதாகவும் கூறினார். (இவற்றில்
ஆந்திரப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா,
கேரளா, மத்தியப்
பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா,
ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு
வங்கம் ஆகியன அடங்கும்).

*******(Release ID: 1632580) Visitor Counter : 219