பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சர்வதேச குடிமைப்பணி அதிகாரிகளுக்கான, பெருந்தொற்று சூழலில் சிறந்த நிர்வாக நடைமுறைகள் தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை உரையாற்றுகிறார்
Posted On:
17 JUN 2020 5:59PM by PIB Chennai
மத்திய பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறைக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், காணொலிக் காட்சி வாயிலாக, சர்வதேச குடிமைப்பணி அதிகாரிகளுக்காக நாளை நடைபெறும் “கொவிட்-19 - பெருந்தொற்று சூழலில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்” என்ற கருத்தரங்கில் உரையாற்றுகிறார். இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், இலங்கையின் ராணுவ மேஜர் ஜெனரல் ஹெச்ஜேஎஸ் குணவர்த்தனே, பங்களாதேஷ் அரசின் மூத்த செயலாளர்கள் மற்றும் பூட்டான், கென்யா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சோமாலியா, தாய்லாந்து, டுனுஷியா, டாங்கா, சூடான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்தக் கருத்தரங்கு ஜூன் 18-19-ல் நடைபெறுகிறது.
கர்நாடகா, குஜராத் மற்றும் பிகாரில் பின்பற்றப்படும் மாநில அளவிலான சிறந்த நடைமுறைகள், கேரளா, தெலங்கானா, மற்றும் ஜம்மு காஷ்மீரில் பின்பற்றப்படும் மாவட்ட அளவிலான சிறந்த நடைமுறைகள் ஆகியவை இந்தக் கருத்தரங்கு அமர்வுகளில் எடுத்துரைக்கப்பட உள்ளன.
----
(Release ID: 1632280)
Visitor Counter : 204