நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அரசின் கோதுமைக் கொள்முதல் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு
Posted On:
17 JUN 2020 5:04PM by PIB Chennai
விவசாயிகளிடமிருந்து அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் கோதுமையின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 16.06.2020 அன்று உயர்ந்துள்ளது. மத்திய அமைப்பின் மொத்த கொள்முதல் 382 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2012-13ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட 381.48 லட்சம் மெட்ரிக் டன் அளவை விட அதிகம். இந்த சாதனை கோவிட்-19 தொற்று நேரத்தில், ஒட்டுமொத்த நாடும் முடக்கத்தில் இருந்த போது மேற்கொள்ளப்பட்டது.
முதல் முடக்கத்தின் காரணமாக கொள்முதல் தொடக்கம் 2 வாரங்கள் தாமதமானது. கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில், கொள்முதல் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பதில் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கியது. விவசாயிகளிடமிருந்து தாமதமில்லாமல் கோதுமையைப் பாதுகாப்பாக கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகத்தின் தலைமையில் மாநில அரசுகள் மற்றும் அனைத்து அரசும் கொள்முதல் முகமைகள் சிறப்பான முயற்சிகள் எடுத்தன. இந்த ஆண்டு கொள்முதல் மையங்களின் எண்ணிக்கை 14,738 லிருந்து 21,869 ஆக அதிகரிக்கப்பட்டது. பாரம்பரிய மண்டிகளுடன் கூடுதலாக அனைத்து இடங்களிலும் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. இது மண்டிகளில் விவசாயிகள் காத்திருப்பைக் குறைத்தது மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்தது. மண்டிகளுக்கு கோதுமை வரத்தை தினந்தோறும் சீர்படுத்த டோக்கன் முறை மூலமாக தொழில்நுட்பத் தீர்வுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளுடன், கொள்முதல் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது இதன் மூலம் எந்தக் கொள்முதல் மையமும் கோவிட்-19 தொற்றுப்பகுதியாக மாறவில்லை.
இந்த ஆண்டு, மத்தியப்பிரதேசம் மத்தியத் தொகுப்புக்கு அதிக அளவாக 129 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வழங்கியது. இது பஞ்சாபின் கொள்முதல் அளவான 127லட்சம் மெட்ரிக் டன்னை மிஞ்சியது. ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும், தேசிய கோதுமை கொள்முதலுக்கு, குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை அளித்தன. இதன் மூலம் இந்தியா முழுவதும் 42 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர் அவர்களுக்கு மொத்தம் ரூ.73,500கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டது. மத்தியத் தொகுப்புக்கு வந்த அதிக அளவிலான உணவு தானிய வரத்து, வரும் காலங்களில் நாட்டு மக்களின் கூடுதல் உணவு தானிய தேவை ஏற்பட்டால், அதை இந்திய உணவுக்கழகம் சந்திக்கத் தயாராவதை உறுதிசெய்தது.
இதே காலகட்டத்தில் 13,606 கொள்முதல் மையங்கள் மூலம்,119 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரசு முகமைகள் கொள்முதல் செய்தன. அதிக அளவிலான கொள்முதல் தெலுங்கானாவில் செய்யப்பட்டது. அங்கு 64 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. அடுத்ததாக ஆந்திராவில் 31 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. மாநிலம் வாரியாக நெல் கொள்முதல் அளவு கீழ்கண்டவாறு-
நெல்
வரிசை எண் மாநிலத்தின் பெயர் கொள்முதல் செய்யப்பட்ட
நெல் அளவு (லட்சம் மெட்ரிக் டன்கள்)
1 தெலுங்கானா 64
2 ஆந்திரப்பிரதேசம் 31
3 ஒடிசா 14
4 தமிழ்நாடு 04
5 கேரளா 04
6 இதர மாநிலங்கள் 02
மொத்தம் 119
(Release ID: 1632274)
Visitor Counter : 306